8 ஆண்டுகளாக முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு நீதியில்லை? - ‘ராணுவம் புத்த பூர்ணிமா’ கொண்டாட தமிழர்கள் எதிர்ப்பு...

 
Published : May 10, 2017, 10:15 PM ISTUpdated : Sep 19, 2018, 03:16 AM IST
8 ஆண்டுகளாக முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு நீதியில்லை? -  ‘ராணுவம் புத்த பூர்ணிமா’ கொண்டாட தமிழர்கள் எதிர்ப்பு...

சுருக்கம்

not solution for mullivaaikkaal death at 8 years by tamilans condemned to

இலங்கையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் ராணுவத்தினர் புத்தபூர்பூர்ணிமா கொண்டாட தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இறுதிக்கட்ட போரில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு இன்னும் நீதி கிடைக்காத நிலையில், இதை கருப்பு நாளாக அனுசரிப்போம் எனத் தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

புத்த பூர்ணிமா

இலங்கையில் பெரும்பாலானோர் புத்த மதத்தை பின்பற்றி வருகின்றனர். இதனால், புத்த பூர்ணிமா விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது, இதற்காக 2 நாட்கள் அரசு விடுமுறையும் விடப்படுகிறது.

முள்ளிவாய்க்கால் படுகொலை

இந்நிலையில், இலங்கை-விடுதலைப்புலிகளுக்கு இடையை நடந்த உள்நாட்டுப்போரின் இறுதிக்கட்டத்தில் முள்ளிவாய்க்கால்படுகொலை அரங்கேற்றப்பட்டது.  2009ம் ஆண்டு மே 18-ந்தேதிமுல்லைத்தீவு மாவட்டம், முல்லிவாய்க்காலில் விடுதலைப்புலிகள்தலைவர் பிரபாகரன் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டார். இந்த நாளை அங்குள்ள தமிழர்கள் கருப்பு நாளாக அனுசரித்து வருகிறார்கள்.

எதிர்ப்பு

இந்நிலையில், சர்ச்சைக்குரிய முள்ளிவாய்க்கால்  பகுதியில் ராணுவத்தின் புத்த பூர்ணிமா கொண்டாட தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

8ஆண்டுகளாக

இது குறித்து  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான செல்வராஜ் கஜேந்திரன்முள்ளிவாய்க்காலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில், “ முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்து 8ஆண்டுகள் கடந்தபின்னும், இன்னும் நீதி கிடக்கவில்லை. ஆனால், ஒவ்வொரு ஆண்டு ராணுவம் புத்த பூர்ணிமாவை சிறப்பாக கொண்டாடி வருகிறது.

கருப்பு மாதம்

எங்களைப் பொருத்தவரை மே மாதம் என்பது, இனப்படுகொலை நடந்த மாதம். அனைத்து தமிழ் மக்களும் கருப்பு மாதமாக இதை கடைப்பிடிக்கிறார்கள். மே 12-ந் தேதி முதல் 18-ந் தேதி வரைமுள்ளிவாய்க்கால் நினைவு வாரமாக கடைபிடிக்கிறோம். இதை அறிந்து அனைவரும் கருப்புநாளாக அனுசரிக்க வேண்டும்.

தமிழர்களின் மனவேதனையை புரிந்து கொள்ளாமல், இலங்கை ராணுவத்தினர் தங்களின் பகுதிகளில் தொடர்ந்து கொண்டாட்டங்களை அரங்கேற்றி வருகிறார்கள்’’ எனத் தெரிவித்தார்.

40 ஆயிரம் தமிழர்கள்

இந்த சூழலில் 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை பிரதமர் மோடி புத்த மாநாட்டில் கலந்து கொள்ள செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் மட்டும் 40 ஆயிரம் மக்கள் சிங்கள ராணுவத்தினரால் கொன்று குவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

கீபேட் போன் இருந்தா போதும்.. பெண்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை விதித்த கிராமம்!
ஒரு லட்சம் ரூபாய்க்கு காண்டம் வாங்கிய சென்னை நபர்! மிரளவிட்ட ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ரிப்போர்ட்!"