மழையைக் கொண்டாடும் மலையாளிகள் !!  ஒரு புலம்பல் இல்ல…கஷ்டம் இல்ல…இன்ச் பை இன்ச் தண்ணீரையும், வெள்ளத்தையும் மகிழ்ந்து அனுபவிக்கும் கேரள மக்கள்!!

First Published Jul 24, 2018, 11:55 AM IST
Highlights
Rain in kerla and the people of kerala celebrate the flood


மழையைக் கொண்டாடும் மலையாளிகள் !!  ஒரு புலம்பல் இல்ல…கஷ்டம் இல்ல…இன்ச் பை இன்ச் தண்ணீரையும், வெள்ளத்தையும் மகிழ்ந்து அனுபவிக்கும் கேரள மக்கள்!!

லேசா மழை பெஞ்சு தெருவில் தண்ணி நின்னாலாலே அய்யய்யோ மழை இப்படி கஷ்டப்படுத்துதே, அரசாங்கம் சரியில்ல, கவுன்சிலர் சரியில்ல, மக்கள் சரியில்ல என புலம்பு, புலம்புன்னு புலம்பும் தமிழக மக்கள், மழையையும், வெள்ளத்தையும் கொண்டாடும் கேரள மக்களைப் பார்த்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.

கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட மழை, வெள்ளம் பொது மக்களுக்கு பெரும் கஷ்டத்தைக் கொடுத்தது. அதில் பாதிக்கப்படாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு வெள்ளத்தின் தாக்கம் இருந்தது. ஆறு, ஏரி,குளம் குட்டை என்று தண்ணீர் செல்லும் பாதை அனைத்தையும் ஆக்கிரமித்து விட்டு பின்னர் குத்துது, குடையுது என ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி சென்னையே நாடகமாடிக் கொண்டிருந்தது.

அதுவும் வெள்ள நிவாண உதவிகள் செய்கிறேன் என்று கூறி அடுத்தவர்கள் வழங்கிய பொருட்களில் எல்லாம் தங்கள் முத்திரையை குத்தி ஆளும் கட்சியினர் செய்த அழிச்சாட்டியம் சொல்லி மாளாது.

சென்னையில் பெய்த அதே மழை, அதே வெள்ளம் இப்போது கேரளா முழுவதும். அது மட்டுமல்ல பல இடங்களில் நிலச்சரிவு. ஆனால் இந்த மழையையும், வெள்ளத்தையும் கேரள மக்கள் மகிழ்ந்து, அனுபவித்து வருகின்றனர்.

கேரளாவில் கடந்த ஜுன் மாதம் முதல் பருவ மழை வெளுத்து வாங்கி வருகிறது. கேரளாவின் இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஒன்றரை மாதங்களுக்கு மேலாக விடாமல் மழை கொட்டி வருகிறது. ஆறுகள் , குளங்கள் எல்லாம் மழை நீரால் நிறைந்து காணப்படுகிறது.

மழை வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. பலர் வீடுகளை இழந்துள்ளனர். அவர்களை அனைவரும் கேம்ப்புகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் இருந்து வேலைக்குச் செல்வதைப் போல நூற்றுக்கணக்கானோர், முகாம்களில் இருந்து வேலைக்கு செல்கின்றனர்.

மழையை எப்பதும் வரவேற்கும் கேரள மக்கள் இந்த கனமழையால் எதையுமே இழக்கவில்லை என்றே கூறுகின்றனர். மழை மீது அவர்கள் கொண்ட அன்பும், ஈர்ப்பும் நம்மை சிலிர்க்க வைக்கிறது.

தற்போது கேரளாவில் தெருக்கள் முழுவதும் நீரால் நிறைது காணப்படுகிறது. ஓர் இளம் பெண் காலை அலுவலகத்துச் செல்லும் போது பேருந்தில் சென்றதாகவும் தற்போது அதே சாலையில் படகில் வீடு திரும்பிக் கொண்டிருப்பதாகவும் சொல்கிறார். தனக்கு இது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் தன்னை படகில் அழைத்து வரும் இளைஞர்களுக்கும் மழையை கொடுத்த இயற்கைக்கும் தன் நன்றியை உற்சாகமாக தெரிவிக்கிறார்.

இதே போல் பல இடங்களில் சாலைகளில் இடுப்பளவுக்கு தேங்கியுள்ள தண்ணீரில் தடுப்புச் சுவர் மீது ஏறி நின்று தண்ணீருக்குள் குதித்து விளையாடி வருகின்றனர். ஆற்றிலும், குளத்திலும் மட்டுமே குதித்து விளையாடி மகிழும் அந்த சிறுவர்கள், தற்போது தெருக்களிலேயே வெள்ளத்தில் குதித்து விளையாடுவது வித்தியாசமான அனுபவமாக உள்ளது என கூறுகின்றனர்.  

பல நகரங்களில் தெருக்கள் தண்ணீரால் நிரம்பியுள்ளதை கேரள மக்கள் எத்தனை கேஷுவலாக எடுத்துக் கொள்கிறார்கள் என்பது நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. ஆம் நீர் நிறைந்த அந்த சாலைகளில் அவர்கள் படகுப் போட்டியை நடத்தி மகிழ்கிறார்கள்.

மேலும் மது பாட்டிலகளை தண்ணீருக்குள் ஒளித்து வைத்துவிட்டு அதை நீருக்குள் இருந்து எடுத்து விளையாடி மகிழ்ந்து வருகின்றனர். இது எப்படியோ  கேரளா மக்கள் மழையை தங்கள் வாழ்க்கையுடன் எப்போதுமே இணைத்து வாழ்கின்றனர். அதை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க கற்றுக் கொண்டு விட்டனர்.

அதே நேரத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களுக்குத் தேவையான நிவாரணம் உள்ளிட்டவற்றை மிக நேர்த்தியாக பினராயி விஜயன் தலைமையிலான அரசு செய்து வருகிறது. அரசு மீது எந்த குறையோ, குற்றச்சாட்டுக்களோ இல்லாமல் ஆட்சி நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

கேரளாவை சொர்க்கத்தில் பூமி என்று சொல்லுவார்கள். அது உண்மைதான். கேரள மக்கள் ஒவ்வொருவரும் இயற்கையை நேசிக்கவும், ரசிக்கவும் மிகுந்த விருப்பமாக உள்ளனர். அது தான் அவர்கள் எந்த இயற்கை பேரிடரையும் ஈசியாக எதிர் கொள்கின்றனர்.

click me!