இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் 1950 மற்றும் 1960ம் ஆண்டுகால மின்சார ரயில்களை மாற்றிவிட்டு வந்தே மெட்ரோ ரயில்களை ரயில்வே அமைச்சகம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக, ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் 1950 மற்றும் 1960ம் ஆண்டுகால மின்சார ரயில்களை மாற்றிவிட்டு வந்தே மெட்ரோ ரயில்களை ரயில்வே அமைச்சகம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக, ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு நகருக்கு நேற்று வந்திருந்த மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
உலகத் தரத்திலான வந்தே மெட்ரோ ரயிலை உருவாக்கி வருகிறோம். இந்த டிசைன் எப்படியாகினும் 2023ம் ஆண்டு மே அல்லது ஜூன் மாதத்துக்குள் முடிந்துவிடும். நாடுமுழுவதும் வந்தே மெட்ரோ ரயில் பரவலாக தயாரிக்கப்பட்டு, கடந்த 1950 மற்றும் 1960களில் புழக்கத்தில் இருக்கும் மின்சார ரயில்கள் மாற்றப்படும்.
ஷாருக்கான், தீபிகா படுகோன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.. பதான் பட சர்ச்சை - பாஜக எம்.பி ஆவேசம்
வந்தே பாரத் மெட்ரோ ரயில் நிச்சயம் நடுத்தரக் குடும்பத்தினரையும், ஏழைகளையும் கவனத்தில் கொண்டு உருவாக்கப்படும். எப்போதுமே பணக்காரர்கள் தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்வார்கள்.
அதனால்தான் மத்திய அரசு குறிப்பாக பிரதமர் மோடி, நடுத்தரக் குடும்பத்தினர், ஏழை மக்கள் மீது அதிக கவனம் செலுத்தி, அவர்களால் செலவழிக்க முடியாத விஷயங்களை சாத்தியமாக்கி வருகிறார்.
இந்தியர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ரயில்வே மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கவேண்டும் என்று பிரதமர் மோடி விரும்புகிறார். வந்தே பாரத் மெட்ரோ ரயில்களில் ஹைட்ரஜனில் இயங்கக்கூடிய ரயில்களையும் இந்திய பொறியாளர்கள் உருவாக்கி வருகிறார்கள்.
ரூ.19 லட்சம் கொடுத்து 7 நாட்கள் ரயில் பயணம் செய்த இளைஞர்
இந்த ரயில்கள் 2023, டிசம்பர் மாதத்துக்குள் முடிந்துவிடும். வந்தே பாரத் -3 ரயில்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில் படுக்கை வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன
ரயில்வே என்பது சில நோக்கங்களுக்காக, நன்மைக்காக உருவாக்கப்பட்டது, இது எப்போதுமே அரசாங்கத்திடமே இருக்கும் தனியார்மயமாகாது.
தற்போது ரயில்வே தினசரி 12 கி.மீ அளவுக்கு ரயில்வே இருப்புப்பாதைகளை கட்டமைத்து வருகிறது. ஆனால், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் தினசரி 4 கி.மீ அளவுதான் இருப்புபாதை அமைக்கப்பட்டது.
:ஊழல்,அழுக்குசாலை,மாசு! இந்தியாவில் யதார்த்தம் இதுதான்!இன்போசிஸ் நாராயண மூர்த்தி பேச்சு
அடுத்த ஆண்டு முதல் தினசரி 16 கிமீ முதல் 17 கி.மீ வரை இருப்புப்பாதை அமைக்கப்படும். பிரதமர் மோடியின் இலக்கு என்பது தினசரி 20 கி.மீ தொலைவுக்கு இருப்பாதை அமைக்க வேண்டும் என்பதுதான்.
மும்பை மற்றும் அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டப் பணிகள் வேகமாக நடக்கின்றன. புல்லட் ரயில் இயக்குவது என்பது சற்று சிரமமானதுதான். அதிகமான அதிர்வுகளை புல்லட் ரயில் உருவாக்கும். ஆனால், அந்த அதிர்வுகளை குறைக்கும் வகையில் தொழில்நுட்பங்களை இந்திய பொறியாளர்கள் அமைத்து வருகிறார்கள்.
இவ்வாறு வைஷ்ணவ் தெரிவித்தார்