இந்தியாவில் யதார்த்தம் என்றாலே ஊழல், அழுக்கான சாலைகள், மாசு ஆகியவைதான் சிங்கப்பூரில் யதார்த்தம் என்றால் சுத்தமான சாலைகள், மாசு இல்லாத சூழல் என்று இருக்கிறது என்று இன்போசிஸ் நிறுவனர் என்ஆர் நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் யதார்த்தம் என்றாலே ஊழல், அழுக்கான சாலைகள், மாசு ஆகியவைதான் சிங்கப்பூரில் யதார்த்தம் என்றால் சுத்தமான சாலைகள், மாசு இல்லாத சூழல் என்று இருக்கிறது என்று இன்போசிஸ் நிறுவனர் என்ஆர் நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டத்தில் ராஜம் நகரில் உள்ள ஜிஎம்ஆர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் வெள்ளிவிழா ஆண்டு கொண்டாடத்தில் இன்போசிஸ் நிறுவனர் என்ஆர் நாராயண மூர்த்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
வெற்றிடம் இருந்தால், அதை மாற்றத்துக்கான வாய்ப்பாகப் பாருங்கள். உங்களை தலைவராக நினைத்துக்கொள்ளுங்கள், யாரும் வந்து பொறுப்பேற்க வேண்டும் எனக் காத்திருக்காமல் நீங்களே முன்னெடுங்கள். யதார்த்தம் என்பது, நீங்கள் என்ன உருவாக்குகிறீர்களோ அதுதான்.
ராகுல் காந்தி தேசத்துக்கே அவமானம்!காங்கிரஸிலிருந்து நீக்குங்கள்: கார்கேவிடம் பாஜக காட்டம்
இந்தியாவைப் பொறுத்தவரை யதார்த்தம் என்பது ஊழல், அழுக்கு சாலைகள், மாசு, பல நேரங்களில் மின்சாரப் பற்றாக்குறை என இதுதான். ஆனால், சிங்கப்பூரில் யதார்த்தம் என்பது, சுத்தமான சாலைகள், மாசு இல்லாத சூழல், தடையில்லா மின்சாரம் ஆகியவைதான். ஆதலால், உங்களின் பொறுப்பு என்பது புதிய யதார்தத்தை உருவாக்குவதுதான்.
சமூகத்தில் மாற்றத்தை உருவாக்கும் மனநிலையை இளைஞர்கள் மனதில் உருவாக வேண்டும், மக்கள் நலன், சமூக நலன், தேசநலன்தான் அனைத்தையும்விட முக்கியம் என்ற எண்ணம் வர வேண்டும்.
அலர்ட்! சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு அட்டவணை இன்று வெளியீடு?
ஜிஎம்ஆர் குழுமத்தின் தலைவர் ஜிஎம் ராவ் இதற்கு உதாரணமாகத் திகழ்ந்தார். இவரிடம் இருந்து மாணவர்களை ஊக்கத்தைப் பெற்று, கிடைக்கும் வாய்ப்பில் நம்மை வளர்த்து தொழில்முனைவோராக வேண்டும், அதிகமான வேலைவாய்ப்பை உருவாக்கவேண்டும். ஏழ்மை மற்றும் விளிம்புநிலையில் இருப்போரை மீட்கவும் சிறந்த வழி வேலைவாய்ப்பை உருவாக்குவது மட்டும்தான்.
இவ்வாறு நாராயண மூர்த்தி தெரிவித்தார்