இந்தியன் ரயில்வேயின் மகாராஜா எக்ஸ்பிரஸ் ரயிலில் இளைஞர் ஒருவர் ரூ.19 லட்சம் கொடுத்து 7 நாட்கள் பயணம் செய்து அதனை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் விதமாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்தியன் ரயில்வே சார்ப்பில் மகாராஜா எக்ஸ்பிரஸ் என்ற ரயில் சேவையை வழங்குகிறது. இந்தியாவின் மிகவும் விலை உயர்ந்த கட்டணம் இந்த ரயிலுக்கு தான் வசூலிக்கப்படுகிறது.
பொதுவாக நம்மில் பலரும் விமானம், பேருந்து, கார் உள்ளிட்ட பயணங்களைக் காட்டிலும் ரயில் பயணத்தில் செலவு குறைவு என்பதாலேயே பலரும் ரயில் பயணத்தை விரும்புவார்கள். ஆனால் மகாராஜா எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு கட்டணத்தை கேள்விப்படும் எந்த நபரும் ரயில் பயணத்தில் செலவு கம்மி என்று கூறமாட்டார்கள். காரணம் இந்த ரயிலில் பயணக் கட்டணமாக ரூ.19 லட்சம் வசூலிக்கப்படுகிறது.
இந்த ரயிலில் பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் தனிநபர் சேவை வழக்கப்படுகிறது. பயணிகளுக்கு சொகுசு அறை, தனி நபர் பார், குளிர்சாதன வசதி, வைபை வசதி உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன.
இந்த ரயிலில் குஷாக்ரா என்ற இளைஞர் ரூ.19 லட்சம் கொடுத்து பயணித்து அதனை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். இந்திய ரயில்வேயில் இதுபோன்ற ஒரு ஆடம்பர பயணத்தை அனுபவித்ததுண்டா என்று கேள்வி எழுப்பி இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.
சென்னையில் சுங்கத்துறைக்கான வைகை கட்டிடம்..! அடிக்கல் நாட்டிய நிர்மலா சீதாராமன்
குஷாக்ராவின் வீடியோவில் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த ரயிலில் ஒரு நாள் பயணிப்பதற்கு பதிலாக சொந்தமாக ஒரு வீட்டை வாங்கியிருப்பேன் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். மற்றொரு நபர் ரயிலுக்கு டிக்கெட் எடுத்த பணத்தில் இந்த உலகத்தையே சுற்றிப் பார்த்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.