மாநில அந்தஸ்து கோரும் ரங்கசாமியின் பேச்சு நாடகத்தின் உச்சகட்டம் - திமுக குற்றச்சாட்டு

By Velmurugan s  |  First Published Dec 18, 2022, 1:40 PM IST

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவை என முதல்வர் ரங்கசாமி கூறுவது நாடகத்தின் மிக பெரிய உச்சகட்டம் என புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான இரா.சிவா குற்றம்சாட்டியுள்ளார்.
 


புதுச்சேரி மாநில திமுக மற்றும் காமராஜ் நகர் தொகுதி திமுக சார்பில் பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிறைவு கூட்டம் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், மாநில கழக அமைப்பாளருமான இரா.சிவா தலைமையில் நடைபெற்றது. அப்போது பொதுகூட்டத்தில் பேசிய சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா.சிவா, பாஜகவை நம்பி சென்ற முதல்வர் ரங்கசாமி முழித்து கொண்டு இருக்கிறார். 

தற்போது மாநில அந்தஸ்து தேவை என முதல்வர் ரங்கசாமி கூறுவது நாடகத்தின் மிக பெரிய உச்சகட்டம். மாநில அந்துஸ்து கேட்டு எதையும் முதல்வர் செய்யவில்லை. மத்தியில் பாஜக ஆட்சி தானே நடக்கிறது. மாநில அந்தஸ்தை பெற வேண்டியது தானே?எல்லாம் நாடகம் தான் என குற்றம்சாட்டி உள்ளார்.

Tap to resize

Latest Videos

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்காததால் தங்களை தேர்வு செய்த மக்களுக்கு ஒன்றும் செய்யமுடியாத நிலையில் உள்ளோம், இதனால் தினமும் மனஉளைச்சல் ஏற்படுவதாக முதல்வர் தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு பதில் அளிக்கும் விதமாக திமுகவின் சிவா கருத்து தெரிவித்துள்ளார்.

 

click me!