“பொய் சொல்வதற்கு முன், உண்மை தெரிஞ்சுருக்கணும்” ராகுல்காந்தியை கலாய்க்கும் நெட்டிசன்கள்..

Published : Aug 25, 2023, 02:41 PM IST
“பொய் சொல்வதற்கு முன், உண்மை தெரிஞ்சுருக்கணும்” ராகுல்காந்தியை கலாய்க்கும் நெட்டிசன்கள்..

சுருக்கம்

ராகுல்காந்தியின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தற்போது லே-லடாக் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கார்கிலில் நடந்த பொதுக்கூட்டத்தில் இன்று ராகுல்காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது, கார்கிலில் பைல் நெட்வொர்க் இல்லை என்றார் ராகுல் காந்தி. செல்போன் கவரேஜ் என்பதே கிடையாது. எந்த அடிப்படை தகவல் தொடர்பு அமைப்பு இங்கு இல்லை.” என்று கூறியிருந்தார்.

ஆனால் ராகுல்காந்தியின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில், சோஷியல் தமாஷா என்ற ட்விட்டர் பக்கத்தில் ராகுல்காந்தியின் இந்த பேச்சை கேலி செய்யும் விதமாக ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. ஒருபக்கம் ராகுல்காந்தி பேசுவது போன்றும், வீடியோவின் அடுத்த பாகத்தில் சில செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி முதல் செய்தியில் மிண்ட் இதழில் வெளியான செய்தியில் ரிலையன்ஸ் ஜியோ லடாக்கில் மொபைல் சேவையைத் தொடங்கியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

 

இரண்டாவது செய்தி 12 டிசம்பர் 2017. இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்தச் செய்தியில் கார்கில், திராஸ் மற்றும் லே ஆகிய இடங்களில் ஏர்டெல் 4ஜி சேவையைத் தொடங்கியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. மூன்றாவது செய்தி 26 நவம்பர் 2022. இது மொபைல் டவரின் திறப்பு விழாவைக் காட்டுகிறது. அதன்படி கார்கில் கக்சர் எல்லை கிராமமும் செல்போன் நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சோஷியல் தமாஷாவின் பதிவில் “ கார்கிலில் பொய் சொல்வதற்கு முன், நீங்கள் உண்மை தெரிந்திருக்க வேண்டும்
ராகுல் காந்தி, இப்போது மோடி அரசு உள்ளது, காங்கிரஸ் அல்ல, 4ஜி சேவை தொலைதூர எல்லைப் பகுதிகளை எட்டியுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
IndiGo பயணிகளுக்கு ஷாக் கொடுத்த CEO.. இன்னும் 10 நாளைக்கு இது தான் கண்டிஷன்..!