Chandrayaan-3: நிலவில் கால் பாதித்த ரோவர்; இஸ்ரோ வெளியிட்ட வீடியோ வைரல்!!

By Dhanalakshmi G  |  First Published Aug 25, 2023, 11:58 AM IST

சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் இஸ்ரோ கணித்த நேரத்தில் ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று நிலவில் கால் பதித்தது. அதுவும் இதுவரை எந்த நாடும் கால்பதிக்காத தென் துருவத்திற்கு அருகில் இறங்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது.


இஸ்ரோ உலக நாடுகளுக்கு சவால் விடுக்கும் வகையில் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று நிலவில் விக்ரம் லேண்டரை இறக்கி இருந்தது. இதுவரை எந்த நாடும் நிலவின் தென் துருவத்தில் கால் பதித்தது இல்லை. எப்போதும், இந்த தென் துருவம்தான் விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

தென் துருவத்தில் சூரிய ஒளிபடுவதில்லை. இதனால் அந்தப் பகுதி எப்போதும் குளிர்ச்சியாக, இருட்டாக காணப்படுகிறது என்று கண்டறிந்துள்ளனர். ஏராளமான கனிம வளங்கள் உள்ளன. அவற்றை ஆராய்ச்சி செய்தால் ஏராளமான ரகசியங்கள் வெளியே வரும் என்று நம்புகின்றனர். இதற்காகத் தான் ரோவர் பிரக்யானை விக்ரம் லேண்டர் சுமந்து சென்றது. நிலவில் கால் பதித்தவுடன், உடனடியாக ரோவர் லேண்டரில் இருந்து வெளியேறவில்லை. விக்ரம் லேண்டர் இறங்கியவுடன் நிலவில் இருந்த தூசுக்கள் கிளம்பியதால், அவை செட்டில் ஆனவுடன், ரோவர் நிலவில் இறங்குவது போன்று அமைக்கப்பட்டு இருந்தது.

Tap to resize

Latest Videos

அதன்படி, விக்ரம் லேண்டரில் இருந்து தாமதமாக ரோவர் நிலவில் கால்பதித்தது. தற்போது அந்த அறிய காட்சியை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலவில் நடக்கும் அற்புதங்களை அவ்வப்போது இஸ்ரோ நமக்கு வழங்கி வருகிறது. அப்படியான ஒன்றுதான் இந்த வீடியோவும். 

இஸ்ரோ பகிர்ந்து இருக்கும் வீடியோவில், விக்ரம் லேண்டரில் இருந்து ரோவர் வெளியேறுவது அற்புத காட்சியாக பதிவாகி இருக்கிறது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த ரோவர் தான் நிலவில் இருக்கும் கனிம வளங்களை 14 நாட்களுக்கு ஆய்வு செய்யும். ரோவரின் இந்த ஆய்வுகள் உலகிற்கே ஆச்சரியங்களை ஏற்படுத்தும் தகவல்களை பகிரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சந்திரயான்-3 திட்டத்தின் ஆயுள் 14 நாள்தானா? அதற்குப் பின் செயல்பட வாய்ப்பு இல்லையா?

பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிலவில் ஏற்பட்ட சில மாற்றங்களால் நிலவின் ஆழத்தில் ஐஸ் கட்டிகள் உருகி இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு தண்ணீரும் உருவானது. இந்தப்  பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டால் மனித குல தோற்றம், விண்வெளி ரகசியங்கள் பல வெளிச்சத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மர்மங்கள், ரகசியங்கள் நிறைந்த இந்தப் பகுதிகளில் தான் தற்போது பிரக்யான் ரோவர் தனது ஆராய்சியை தொடங்கியுள்ளது. 

நிலவில் இருப்பதாக கருதப்படும் அலுமினியம், பொட்டாசியம், மக்னீசியம், சிலிக்கான், இரும்பு போன்ற கனிமங்கள், கெமிக்கல்கள் விண்வெளி ஆராய்ச்சிக்கு பெரிய அளவில் உதவும். இவை நிலவில் எப்படி இயங்குகின்றன, இவை எவ்வாறு பூமிக்கு உதவும் என்று பல தகவல்கள தெரியவரும்.

நிலவில் மாயாஜாலம் செய்யும் இஸ்ரோ; சந்திரயான் -3 லேண்டரின் படங்களை எடுத்த சந்திரயான் 2!!

click me!