கேதார்நாத்தில் ராகுல் காந்தியின் பாசாங்குத்தனம் இதுதான்! வீடியோ போட்டுக் காட்டும் பாஜக!

By SG Balan  |  First Published Nov 6, 2023, 7:18 PM IST

கேதார்நாத் சென்றால் கால்நடையாகச் செல்வேன் என்று சொல்லிவிட்டு இப்போது கேதார்நாத்துக்கு ஹெலிகாப்டரில் வந்த இறங்கியிருக்கிறார் என்று பாஜக கிண்டல் செய்கிறது.


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 3 நாள் பயணமாக கேதார்நாத் தாமுக்கு சென்றுள்ளார். நவம்பர் 5ஆம் தேதி திங்கட்கிழமை ஹெலிகாப்டரில் அங்கு சென்றடைந்த ராகுல் காந்தி, பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். இதன் எதிரொலியாக பாஜக ராகுல் காந்தியை ட்ரோல் செய்து சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோவைப் பதிவிட்டுள்ளது.

ராகுல் காந்தி ஹெலிகாப்டரில் கேதார்நாத் சென்றடைந்த பழைய வீடியோவை பகிர்ந்துள்ள பாஜக, ராகுல் காந்தியின் பேச்சு ஒரு கேலிக்கூத்து என விமர்சித்துள்ளது. 

Latest Videos

undefined

தீபாவளிக்கு மறுநாளும் லீவுதான்... மகிழ்ச்சியா கொண்டாடுங்க: தமிழக அரசு வெளியிட்ட சர்ப்ரைஸ் அறிவிப்பு

केदारनाथ पर राहुल गांधी का ढोंग! pic.twitter.com/A2GIBTmVmW

— BJP (@BJP4India)

நவம்பர் 10, 2022 அன்று பாரத் ஜோடோ யாத்திரையின்போது எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், உலகின் மிகப்பெரிய துறவியான பாபா கேதார்நாத் இருக்கும் இடத்திற்கும் சென்றால், ஹெலிகாப்டரில் செல்லமாட்டேன் என்று ராகுல் காந்தி கூறுகிறார். 10-15 கிலோமீட்டர் தூரம் நடந்தே செல்வேன் என்றும் அவர் கூறுகிறார்.

என்னால் 15 கிலோமீட்டர் தூரம் ஹெலிகாப்டரில் பயணம் செய்ய முடியாது, கேதார்நாத் சென்றால் கால்நடையாகச் செல்வேன் என்று சொல்லிவிட்டு இப்போது கேதார்நாத்துக்கு ஹெலிகாப்டரில் வந்த இறங்கியிருக்கிறார் என்று பாஜக கிண்டல் செய்கிறது.

ராகுல் காந்தியின் கேதார்நாத் தாம் யாத்திரை அவரது கடட நாடகத்தை வெளிப்படுத்துவதாகவும் பாஜக கூறியுள்ளது.

மீண்டும் டெல்லியை உலுக்கிய நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.2 ஆகப் பதிவு

click me!