சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: மத்தியப்பிரதேச பாஜக அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்!

By Manikanda Prabu  |  First Published Sep 28, 2023, 3:04 PM IST

மத்தியப்பிரதேச மாநிலத்தில் 12 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் அம்மாநில பாஜக அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்


மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இம்மாநிலத்தில், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 12 வயது சிறுமி ரத்தகாயங்களுடன், அரை நிர்வாணமாக வீடு வீடாகச் சென்று உதவி கேட்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பட்நகர் சாலையில் உள்ள சிசிடிவி கேமராவில் இந்தக்‍ காட்சிகள் பதிவாகியுள்ளன. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி வீடு வீடாக உதவி கேட்பதும், அங்கிருந்த ஒருவர் சிறுமியை விரட்டியடிப்பதும் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

Latest Videos

undefined

இறுதியில் ஆசிரமம் ஒன்றில் இருந்தவர்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததுடன் போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையில் அச்சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேல் சிகிச்சைக்காக இந்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் உடல்நிலை தற்போது தேறி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில உள்துறை அமைச்சர் நாரோத்தம் மிஸ்ரா தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி அண்டை மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும், தனது தாத்தா மற்றும் சகோதரருடன் வசித்து வரும் அச்சிறுமி பள்ளிக்கு சென்றபோது காணாமல் போனதால் இதுகுறித்து அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும், பாதிக்கப்பட்ட சிறுமி இதுவரை பேசாத காரணத்தால் அவர் பற்றிய முழு விவரம் தெரியவில்லை. அவரது விவரம் குறித்து அறிய போலீசார் முயற்சித்து வருவதுடன், தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் 12 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மத்தியப் பிரதேசத்தில் 12 வயது சிறுமிக்கு நடந்த கொடூரமான குற்றம், பாரத அன்னையின் இதயத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவு: அரசியல் தலைவர்கள் இரங்கல்!

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் மைனர் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் பலாத்காரங்கள் அதிக எண்ணிக்கையில் மத்தியப் பிரதேசத்தில் தான் நடக்கிறது. இந்தக் குற்றங்களைச் செய்த தீயவர்கள்தான் குற்றவாளிகள். அதுமட்டுமின்றி, மகள்களை பாதுகாக்க முடியாத நிலையில் தான் பாஜக அரசு உள்ளது. நீதியும் இல்லை, சட்டம் ஒழுங்கும் இல்லை, உரிமையும் இல்லை. இன்று, மத்தியப் பிரதேசத்தின் மகள்களின் நிலையைக் கண்டு நாடு முழுவதும் வெட்கப்படுகிறது. ஆனால் மாநில முதல்வருக்கும், நாட்டின் பிரதமருக்கும் வெட்கமே இல்லை. தேர்தல் பேச்சுகளுக்கும், பொல்லாத வாக்குறுதிகளுக்கும், பொய்யான முழக்கங்களுக்கும் மத்தியில் நம் நாட்டு மகள்களின் அலறல்களை அடக்கி வைத்திருக்கிறார்கள்.” என கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“2012ஆம் ஆண்டு நிர்பயா வழக்கைவிட, இந்தச் சம்பவம் மிகவும் கொடூரமானது. மத்தியப் பிரதேசத்தில் தினமும் எட்டு பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் அரங்கேறுகின்றன. ஓர் அப்பாவி 12 வயது சிறுமிக்கு நீதி வழங்க முடியாத பாஜக அரசு, ஒரு நிமிடம்கூட ஆட்சியில் இருக்க தகுதி இல்லை.” என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கண்டனம் தெரிவித்துள்ளார்.

click me!