நாளை நடைபெறும் மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டத்தைக் கெடுக்கும் நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு கன்னட அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்து வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 29) கர்நாடகாவில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போராடத்துக்கு அழைப்பு விடுத்துள்ள ‘கன்னட ஒக்குடா’ அமைப்பு போராட்டத்தைத் தடுக்கும் விதமான நடவடிக்கைளில் ஈடுபடக் கூடாது என்று மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த பந்த் கர்நாடகா முழுவதுக்குமானது என்றும், நெடுஞ்சாலைகள், சுங்கச்சாவடிகள், ரயில் சேவைகள் மற்றும் விமான நிலையங்களை மூட முயற்சிப்போம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ள இந்த முழு அடைப்புப் போராட்டத்தின் ஒரு பகுதியாக பெங்களூருவில் டவுன்ஹாலில் இருந்து சுதந்திர பூங்கா வரை கண்டன ஊர்வலம் நடைபெற உள்ளது.
இதற்கிடையில், காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு கர்நாடகா தமிழகத்துக்கு அக்டோபர் 15ஆம் தேதி வரை தினமும் 5 ஆயிரம் கன அடி நீரைத் திறக்க வேண்டும் என்று கூறிய உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று முதல்வர் சித்தராமையா புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
375 வருடமாக கடலுக்கு அடியில் காணாமல் போயிருந்த 8வது கண்டம் கண்டுபிடிப்பு!
அதே நாளில், பெங்களூரு மெட்ரோவில் ஆய்வுப் பணிகளுக்காக, கெங்கேரியிலிருந்து சல்லகட்டா வரை உள்ள பர்பிள் வழித்தடத்தில் மைசூர் சாலை மற்றும் கெங்கேரி நிலையங்களுக்கு இடையே மெட்ரோ சேவைகள் நிறுத்தப்படும். இருப்பினும், பையப்பனஹள்ளி மற்றும் மைசூர் சாலை, ஒயிட்ஃபீல்டு மற்றும் கே.ஆர்.புரம் நிலையங்கள் மற்றும் பச்சை வழித்தடத்திலும் ரயில் சேவைகள் வழக்கம்போல தொடரும் என்றும் நம்ம மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா தரப்பில் தொடரப்பட்ட இருவேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் சில தினங்களுக்கு முன் விசாரணைக்கு வந்தன. அப்போது, காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளின்படி கர்நாடக அரசு செயல்பட வேண்டும் என உத்தரவிட்டது.
அதாவது, ஒழுங்காற்றுக்க் குழு மற்றும் மேலாண்மை வாரியத்தின் சமீபத்திய பரிந்துரையின்படி, கர்நாடகாவில் இருந்து 15 நாட்களுக்கு தினமும் 5000 கன அடி நீரை தமிழ்நாட்டுக்குத் திறக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு அதிருப்தி தெரிவித்து கர்நாடகா முழுவதும் பல்வேறு கன்னட அமைப்புகள் நாள்தோறும் வெவ்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன.
கையால் தொடமுடியாத அளவு சூடேறும் ஐபோன் 15 ப்ரோ மாடல்கள்: கேஜெட் பிரியர்களுக்கு ஏமாற்றம்!