எம். எஸ். சுவாமிநாதன் யார்? அவரை இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைப்பது ஏன்?

By SG Balan  |  First Published Sep 28, 2023, 1:00 PM IST

சுவாமிநாதன் சென்னையில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையை நிறுவினார். 1971 ஆம் ஆண்டு ராமன் மகசேசே விருது மற்றும் 1986 ஆம் ஆண்டு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உலக அறிவியல் விருது உட்பட பல கௌரவங்களைப் பெற்றுள்ளார்.


இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை என்று போற்றப்படும் எம்.எஸ்.சுவாமிநாதன் சென்னையில் வியாழக்கிழமை காலை 11.20 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 98. இந்தியாவின் குறைந்த வருவாய் உள்ள விவசாயிகள் அதிக மகசூல் பெறுவதை உறுதி செய்வதற்காக, அதிக மகசூல் தரும் நெல் ரகங்களை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றியவர் சுவாமிநாதன்.

1987இல் முதல் உலக உணவுப் பரிசு இவருக்குக் கொடுக்கப்பட்டது. பிறகு, சென்னையில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையை நிறுவினார். 1971ஆம் ஆண்டு ராமன் மகசேசே விருது, 1986ஆம் ஆண்டு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உலக அறிவியல் விருது உட்பட பல கௌரவங்களைப் பெற்றுள்ளார்.

Latest Videos

undefined

சுவாமிநாதன் மற்றும் நார்மன் போர்லாக் ஆகியோரின் கூட்டு அறிவியல் முயற்சிகள், பொதுவாக ஏற்கப்பட்டன. இதன் மூலம் 1960களில் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் நிலவிய உணவுப் பஞ்சத்தைப் போக்கத் தேவையான விவசாய உற்பத்தியை பெருக்க வழிவகுக்கப்பட்டது.

ஆன்டி என்று கூப்பிட்டதால் ஆத்திரம்! ஏடிஎம் காவலாளிக்கு செருப்படி கொடுத்த பெங்களூரு பெண்!

பிலிப்பைன்ஸில் உள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (IRRI) டைரக்டர் ஜெனரலாக பணியாற்றியபோது அவரது பங்களிப்புகளைப் பாராட்டி உலக உணவுப் பரிசு சுவாமிநாதனுக்கு வழங்கப்பட்டது. இது விவசாயத் துறையில் நோபல் பரிசு போன்ற மிக உயர்ந்த தனித்துவமான அங்கீகாரம் ஆகும்.

இந்தியாவில் பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தில் "பொருளாதார சூழலியலின் தந்தை" என்ற பட்டத்தைப் பெற்றார்.

இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) மற்றும் பக்வாஷ் மாநாட்டின் தலைவராக பணியாற்றியுள்ளார். 1990 இல், அவர் "எவர்கிரீன் புரட்சி" (Evergreen Revolution) என்ற சொற்றொடரைக் கொண்டுவந்தார், சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் நிரந்தரமான உற்பத்தித்திறனை உருவாக்கவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி வந்தார்.

2007 மற்றும் 2013 க்கு இடையில், அவர் இந்திய நாடாளுமன்றத்தில் ஒருமுறை எம்.பி.யாகவும் இருந்திருக்கிறார். அவர் பதவியில் இருந்தபோது இந்தியாவில் பெண் விவசாயிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் சட்டத்தைக் கொண்டுவந்தார், ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை.

காவிரிக்காக கர்நாடகாவில் நாளை முழு அடைப்பு! மாநில அரசுக்கு கன்னட அமைப்புகள் எச்சரிக்கை!

click me!