இந்துத்துவா தலைவர் விடி. சவார்க்கர் விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவும் முட்டிக்கொண்டனர்.
இந்துத்துவா தலைவர் விடி. சவார்க்கர் விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவும் முட்டிக்கொண்டனர்.
சவார்க்கர் குறித்த தனது கடுமையான விமர்சனத்தை நிறுத்தப்போவதில்லை என்று ராகுல் காந்தி பிடிவாதமாக இருக்கிறார். ஆனால், சவார்க்கர் மீது சிவசேனா அதிகமான மரியாதை வைத்துள்ளது என்று உத்தவ் தாக்கரே கூறியுள்ளது இருவருக்கும் இடையே உரசல் போக்கைக் குறிக்கிறது.
மகாராஷ்டிராவில் மகாவிகாஸ் அகாதி கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி சேர்ந்து ஆட்சியில் இருந்தன. தற்போது மகாவிகாஸ் அகாதி கூட்டணி ஆட்சியில் இல்லாத நிலையிலும் கூட்டணி தொடர்வதாக நம்பப்பட்டு வருகிறது.
காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி வரும் 19ம் தேதி தொடங்கி வைக்கிறார்
இந்த சூழலில் சவார்க்கர் விவகாரத்தில் ராகுல் காந்தி, உத்தவ் தாக்கரே கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
சுதந்திரப் போராட்டக் காலத்தில் ஆங்கிலேயரிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டுதான் இந்துத்துவா தலைவர் வீர சவார்க்கர் சிறையில் இருந்து வெளியே வந்தார் என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார்.
மகாராஷ்டிராவில் தற்போது பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தி ஈடுபட்டுள்ளார். அகோலா நகரில் நேற்று ராகுல் காந்தி நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் “ சுதந்திரப் போராட்ட காலத்தில் சவர்க்கர் மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்துதான் வெளியேறினார்.
உங்களின் ஒழுங்கான வேலையாள் எழுதி சவார்க்கர் கையொப்பமிட்டுள்ளார். என்ன காரணம். பயம். ஆங்கிலேயர்களைப் பார்த்துப் பயம். யாரேனும் தங்களின் சித்தாந்தங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென்றால் துணிந்து வர வேண்டும்.
ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ’ யாத்திரையில் நடிகை ரியா சென் பங்கேற்பு
இந்த கடித்தத்தில் சவார்க்கர்தான் கையொமிட்டுள்ளார் என்பது என்னுடைய கருத்து. நேரு, வல்லபாய் படேல் சிறையில் இருந்தபோது அவர்கள் இதுபோன்ற எந்தக் கடிதத்தையும் எழுதிக் கொடுக்கவில்லை. இருவிதமான சித்தாந்தங்கள் உள்ளன. எங்கள் கட்சியில் வெளிப்படையான விவாதங்கள் உண்டு.
சர்வாதிகாரம் இல்லை பழங்குடியினத் தலைவர் பிர்சா முன்டாவுக்கு ஆங்கிலேயர்கள் நிலம் அளித்தனர். ஆனால், அதைப் பெற அவர் மறுத்து அடங்கிப்போக மறுத்துவிட்டார் காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை அவர் மதிப்பிற்குரிய தலைவர். ஆங்கிலேயரிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து வெளியேவந்த சவர்க்கர்தான் பாஜகவுக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் தலைவர். ” எனத் தெரிவித்தார்
முறையான பொருளாதாரத்தை விரிவுபடுத்தவே பணமதிப்பிழப்பு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்
ராகுல் காந்தி பேச்சுக்கு உத்தவ் தாக்கரே பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில் “ ராகுல் காந்தியின் பேச்சில் நாங்கள் உடன்படவில்லை. நாங்கள் சவார்க்கரை மதிக்கிறோம். அதேநேரம், எங்களை பாஜக கேள்விகேட்டால், ஜம்மு காஷ்மீரில் பிடிபி கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் இருந்ததையும் கூற வேண்டும். பிடிபி கட்சி ஒருபோதும் பாரத் மாதா கி ஜேஎன்று சொல்லமாட்டார்கள்”எனத் தெரிவித்தார்
மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில் “ ராகுல் காந்தி சவார்க்கர் குறித்து தவறான வரலாறுகளை, திரிக்கப்பட்டவற்றை பரப்புகிறார். மகாராஷ்டிரா மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்” எனத் தெரிவித்தார்