கட்டாய மதமாற்றக் கொடுமை! லக்னோவில் 4வது மாடியிலிருந்து கீழே தள்ளி இளம் பெண் கொலை : காதலர் கைது

Published : Nov 17, 2022, 01:40 PM IST
கட்டாய மதமாற்றக் கொடுமை! லக்னோவில் 4வது மாடியிலிருந்து கீழே தள்ளி இளம் பெண் கொலை : காதலர் கைது

சுருக்கம்

உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோவில் முஸ்லிம் மதத்துக்கு மாறுவதற்கு மறுத்த பெண்ணை 4வது மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் அந்த பெண்ணின் காதலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோவில் முஸ்லிம் மதத்துக்கு மாறுவதற்கு மறுத்த பெண்ணை 4வது மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் அந்த பெண்ணின் காதலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் கடந்த மே மாதம் ஷர்தா வல்கர் என்ற பெண்ணை 35  துண்டுகளாக வெட்டி, வனப்பகுதியில் பல்வேறு இடங்களில் புதைத்த அவரின் காதலர் அப்தாப் பூனாவல்லா விவகாரம் பெரிதாக எழுந்துள்ளது.இந்த சூழலில் இந்தக் கொலை நடந்துள்ளது.

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி… பயணிகள் வசதிக்காக ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு!!

லக்னோவைச் சேர்ந்தவர் நிதி. இவரின் காதலர் சூபியான். இருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமைஇரவு 4வது மாடியிலிருந்து நிதியை தள்ளி அவரின் காதலர் சூபியான் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்த விவகாரத்தில் உயிரிழந்த பெண்ணின் காதலர் சூபியான் மீது போலீஸார் கொலை முயற்சி மற்றும் கட்டாய மதமாற்றம் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவுசெய்துள்ளனர்

உயிரிழந்த இளம்பெண் நிதியின் தாயார் கூறுகையில் “ நிதியை திருமணம் செய்ய வேண்டுமென்றால் இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும் எனக் கூறி கடந்த 15 நாட்களாக சூபியான் கூறி வந்தார். ஆனால், நாங்களும், நிதியும் இஸ்லாம் மதத்துக்கு மாற முடியாது என எதிர்ப்புத் தெரிவித்தோம். அப்போது நடந்த சண்டையில் என் மகளை 4வது மாடியிலிருந்து தள்ளி சூபியான் கொலை செய்துவிட்டார்” எனத் தெரிவித்தார்

Kashi Tamil Sangamam: காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி வரும் 19ம் தேதி தொடங்கி வைக்கிறார்

இது குறித்து துபாகா போலீஸ் ஆய்வாளர் ஹெச் பசந்த் குஞ்ச் விசாரித்து வருகிறார். கூடுதல் ஆணையர் சிஎன் சின்ஹாவும் சம்பவம் குறித்து விசாரித்து வருகிறார்
 

PREV
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
நவ்ஜோத் சித்துவின் மனைவி காங்கிரஸில் இருந்து அதிரடி நீக்கம்..! சர்ச்சை நாயகனின் தொடர் அட்ராசிட்டி!