Kashi Tamil Sangamam: காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி வரும் 19ம் தேதி தொடங்கி வைக்கிறார்

By Pothy Raj  |  First Published Nov 17, 2022, 12:41 PM IST

உத்தரப்பிரதேசம் வாரணாசியில் நடக்கும் காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை வரும் 19ம் தேதி பிரதமர் மோடி முறைப்படி தொடங்கி வைப்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


உத்தரப்பிரதேசம் வாரணாசியில் நடக்கும் காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை வரும் 19ம் தேதி பிரதமர் மோடி முறைப்படி தொடங்கி வைப்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பனாராஸ் இந்து பல்கலைக்கழகத்தில் உள்ள அரங்கில் நடக்கும் நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

Tap to resize

Latest Videos

இனி விமானத்தில் முகக்கவசம் அணியத்தேவையில்லை... அறிவித்தது விமானப்போக்குவரத்து அமைச்சகம்!!

வாரணாசிக்கும், தமிழகத்துக்கும் இருக்கும் பழமையான நாகரீகம் மற்றும் அறிவுசார் தொடர்பையும் உயிர்பிக்கும் வகையில் ஒரு மாதகால காசி தமிழ்சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சி 17ம்தேதி(இன்று) தொடங்கி, டிசம்பர் 17ம் தேதிவரை நடக்கிறது. 

ஆனால், பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் நடக்கும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை வரும் 19ம் தேதி முறைப்படி தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியின் நோக்கமாக காசிக்கும், தமிழகத்துக்கும் இடையிலான தொடர்புகளை வெளிக்கொண்டுவரும் வகையில் அறிவிஞர்கள் இடையே கல்வி சார் பரிமாற்றங்கள், ஆக்கப்பூர்வமான கருத்தரங்குகள், ஆலோசனைக் கூட்டங்கள், பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

முறையான பொருளாதாரத்தை விரிவுபடுத்தவே பணமதிப்பிழப்பு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

இந்த நிகழ்ச்சியில் பல்துறை அறிஞர்கள் பங்கேற்கும் விதத்தில் தமிழகத்தில் இருந்து காசிக்கு 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயிலில் தமிழகத்தைச் சேர்ந்த 2,592 பிரதிநிதிகள் பயணிக்க உள்ளனர். முதல் கட்டமாக 216 பிரதிநிதிகள் இந்த ரயிலில் பயணிக்க உள்ளனர். 

கல்வியாளரும் பாரதிய பாஷா சமிதி தலைவருமான சாமு கிருஷ்ணா சாஸ்திரி கூறுகையில் “ வடக்கில் மற்றும் தென்பகுதியில் வாழும் மக்கள் தங்கள் பூர்வீக,  பழங்காலத் தொடர்புகளை புதுப்பித்துக் கொள்வதற்கு வாய்ப்பாக காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சி அமையும். அடுத்த ஒரு மாதத்தில் தமிழகத்தில் இருந்து 2500க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் காசிக்கு வருகைதர உள்ளனர்.

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி… பயணிகள் வசதிக்காக ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு!!

ஒவ்வொரு குழுவிலும் 200 பேர் அடங்கிய 12 குழுக்கள் வர உள்ளனர். இந்த குழுவில் மாணவர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள், கல்வி, கலாச்சாரப் பிரிவைச் சேர்ந்தவர்கள், வர்த்தகம், தொழில்பிரிவைச் சேர்ந்தவர்கள் என பலரும் பங்கேற்கிறார்கள்.

தமிழகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் புனிதமான கார்த்திகை மாதத்தில் காசிக்கு வருகைதர உள்ளனர். பனாராஸ் இந்து பல்கலைக்கழகம் இந்த நிகழ்ச்சியை நடத்துவதில் பெருமை கொள்கிறது. இதற்காக 75வகையான ஸ்டால்களை அமைத்துள்ளது” எனத் தெரிவித்தார்

click me!