இனி விமானத்தில் முகக்கவசம் அணியத்தேவையில்லை... அறிவித்தது விமானப்போக்குவரத்து அமைச்சகம்!!

By Narendran SFirst Published Nov 16, 2022, 10:40 PM IST
Highlights

விமானப் பயணத்தின் போது முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று விமானப்போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

விமானப் பயணத்தின் போது முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று விமானப்போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுக்குறித்து அனைத்து விமான நிறுவனங்களுக்கும் விமானப்போக்குவரத்து அமைச்சகம் தனது உத்தரவில், விமானப் பயணத்தின் போது முகக்கவசம் அணிவது கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பாக, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மலேரியாவுக்கு சிகிச்சை.. ஹெபடைடிஸ் சி எதிர்ப்பு மருந்து,ஆனால்! புது தகவலை வெளியிட்ட ஜேஎன்யு

முகக்கவசம் பற்றிய விமான அறிவிப்புகளில் அபராதம் அல்லது தண்டனை நடவடிக்கையைக் குறிப்பிடக்கூடாது. இனிமேல் விமானத்தில் உள்ள அறிவிப்புகளில், கொரோனாவால் ஏற்படும் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, அனைத்து பயணிகளும் முகக்கவசம் பயன்படுத்துவது சிறந்தது என்று மட்டுமே குறிப்பிடலாம். அபராதம்/தண்டனை நடவடிக்கைகள் குறித்து எந்தவொரு அறிவிப்பும் அறிவிக்கப்பட வேண்டியதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அவமானம்.! இந்திய இருமல் சிரப் காரணமாக குழந்தைகள் மரணம் - இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி வேதனை

முன்னதாக கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதில் ஒன்றாக விமானத்தில் பயனம் செய்வோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த நடைமுறையை ரத்து செய்வதாக விமானப்போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

click me!