எப்போது திருமணம்? மீண்டும் ராகுல்காந்தியிடம் கேட்கப்பட்ட கேள்வி.. அவர் சொன்ன பதில்!

By Ramya s  |  First Published Aug 27, 2024, 11:27 AM IST

காஷ்மீர் மாணவர்களுடனான சமீபத்திய உரையாடலில், ராகுல் காந்தியின் திருமணம் குறித்த கேள்விகள் மீண்டும் எழுந்துள்ளன. மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், திருமணம் குறித்து திட்டமிடவில்லை என்றும், ஆனால் நடந்தால் அவர்களை அழைப்பதாகவும் உறுதியளித்தார்.


ராகுல் காந்திக்கு எப்போது திருமணம்? என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.. இதுவரை பலர் பல இடங்களில் பல முறை ராகுல்காந்தியிடம் இந்த கேள்வியை கேட்டிருந்தாலும், இந்த முறை ஸ்ரீநகரில் பெண் மாணவர்கள் சிலர் இந்த கேள்வியை கேட்டுள்ளனர். இதற்கு முன்பு ராகுல்காந்தியிடம், அவரின் திருமணம் பற்றி கேள்வி கேட்கப்பட்ட போதிலும், அதற்கு சரியான பொண்ணு வரும்போது திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி காஷ்மீர் மாணவர்களுடன் உரையாடினார். அப்போது அவரிடம் திருமணத்தை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று ஒரு மாணவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ராகுல்காந்தி “ நான் 20-30 ஆண்டுகளாக அந்த அழுத்தத்தைத் தாண்டிவிட்டேன். ஆனால் இது ஒரு நல்ல விஷயம்" என்று கூறினார்.

Tap to resize

Latest Videos

பிரதமர் மோடி திறந்து வைத்த சத்ரபதி சிவாஜி சிலை; சுக்குநூறாக நொறுங்கியது

நீங்கள் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளீர்களா என்று மற்றொரு மாணவர் ராகுல்காந்தியிடம் கேள்வி கேட்டார். அதற்கு “ ஆமாம், ஆமாம், அதாவது, நான் அதை திட்டமிடவில்லை. ஆனால் அது நடந்தால் ...," என்று ராகுல்காந்தி பதிலளித்தார். அப்போது தயவு செய்து உங்கள் திருமணத்திற்கு எங்களை அழைக்கவும் என்று மாணவர்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு நான் கண்டிப்பாக அழைப்பேன் என்று ராகுல்காந்தி உறுதியளித்தார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ரேபரேலி நாடாளுமன்றத் தொகுதியில் அவர் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு முதல் முறையாக ஒரு பேரணியின் போது இந்த கேள்வி எழுந்தது. அப்போது கூட்டத்தில் இருந்த பிரியங்கா காந்தி, கூட்டத்தில் இருந்து யாரோ கேட்ட கேள்விக்கு பதிலளிக்குமாறு அவரிடம் கூறினார்.

அப்போது எப்போது திருமண்ம என்ற கேள்விக்கு பதிலளித்த ராகுல்காந்தி, அது விரைவில் நிறைவேறும் என்று ராகுல் காந்தி உறுதியளித்தார். 

யார் இந்த அனுராதா திவாரி? 'பிராமின் ஜீன்' சர்ச்சையைக் கிளப்பிய பெங்களூரு சி.இ.ஓ விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

கடந்த ஆண்டு ஜூன் மாதம், பாட்னாவில் நடந்த மெகா எதிர்க்கட்சிகளின் கூட்டத்தின் போது, ​​ராகுல் காந்தியை திருமணம் செய்து கொள்ளுமாறு லாலு பிரசாத் யாதவ் வற்புறுத்தினார். மேலும் ராகுல்காந்தியிடம் “ திருமணம் செய்துகொள், உங்கள் திருமண ஊர்வலத்தில் நாங்கள் பங்கேற்க விரும்புகிறோம்" என்று லாலு யாதவ் கூறினார்.

இதற்கு பதிலளித்த ராகுல்காந்தி எனக்கு திருமணம் நடக்கும் என்று கூறினார். கடந்த அக்டோபரில், ஜெய்ப்பூர் மகாராணி கல்லூரி மாணவர்களுடன் உரையாடியபோது ராகுல் காந்தியிடம் இதே கேள்வி கேட்கப்பட்டது. அப்போது ஒரு மாணவி "நீங்க ரொம்ப புத்திசாலியா, நல்லா இருக்கீங்க... ஏன் கல்யாணத்தைப் பற்றி யோசிக்கவில்லை?" என்றுகேட்டார். அதற்கு பதிலளித்த ராகுல்காந்தி, எனது வேலையிலும், காங்கிரஸ் கட்சியிலும் முழுவதுமாக நான் சிக்கிக் கொண்டேன்.” என்று பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!