பஞ்சாப் அரசு கலைக்கப்படும்... ஆம் ஆத்மியை அலறவிடும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்!

Published : Aug 25, 2023, 11:37 PM ISTUpdated : Aug 25, 2023, 11:43 PM IST
பஞ்சாப் அரசு கலைக்கப்படும்...  ஆம் ஆத்மியை அலறவிடும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்!

சுருக்கம்

குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த விரும்பினால், மணிப்பூரில், ஹரியானாவில் அதைச் செய்ய வேண்டும் என்று நான் ஆளுநரிடம் கூற விரும்புகிறேன் என ஆம் ஆத்மி கட்சி பதில் கொடுத்துள்ளது.

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி (ஆம் ஆத்மி) அரசாங்கத்திற்கும் ஆளுநருக்கும் இடையே உரசல் தீவிரமடைந்துள்ளது. தனது கடிதங்களுக்கு முதல்வர் பகவந்த் மான் தொடர்ந்து பதில் அளிக்காமல் இருப்பதால், ஆளுநர் பஞ்சாப் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்ய வாய்ப்பு உள்ளது.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிவிப்பில், முதல்வர் பகவந்த் மான் தனது கடிதங்களுக்கு பதிலளிக்கவில்லை என்றால் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைப்பேன் என்றும் குற்றவியல் நடவடிக்கைகள் தொடங்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

ஆளுநர் பரிந்துரை செய்தால், 356வது சட்டப்பிரிவின் கீழ் மாநிலத்தின் ஆட்சியைக் கலைத்து நேரடியாக குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்படலாம்.

சந்திரயான்-3 'மூன் வாக்'! பிரக்யான் ரோவர் 8 மீட்டர் தூரம் பயணித்துள்ளதாக இஸ்ரோ தகவல்

பஞ்சாபில் போதைப்பொருள்:

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது கடிதங்களில், பஞ்சாப் மாநிலத்தில் போதைப்பொருள் கடத்தல் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளார். போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கை குறித்தும் முதல்வர் பகவந்த் மானிடம் ஆளுநர் கேட்டிருக்கிறார்.

அந்த கடிதத்தில், பஞ்சாபில் போதைப்பொருட்கள் மருந்தகங்களிலும், அரசு கட்டுப்பாட்டில் உள்ள மதுக்கடைகளிலும் கூட கிடைப்பதாக கூறப்படுவது பொதுவானதாகிவிட்டது என்று குறிப்பிட்டுள்ள ஆளுநர், மாநிலத்தில் ஐந்தில் ஒருவர் போதைப்பொருளுக்கு அடிமையாக இருப்பதாக நாடாளுமன்ற நிலைக்குழுவின் சமீபத்திய அறிக்கையையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சந்திரயான்-3 பணியில் மூழ்கியதால் சகோதரியின் திருமணத்தைத் தவறவிட்ட இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல்

ஆம் ஆத்மி பதில்:

ஆளுநரின் எச்சரிக்கைக்கு பதிலளித்த பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சி செய்தித் தொடர்பாளர் மல்விந்தர் சிங், கவர்னர் ஒரு ஒழுங்கை பின்பற்ற வேண்டும் என்று கூறினார். "இந்தியாவின் அரசியலமைப்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது" எனவும் வலியுறுத்தினார். குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்படும் என்ற ஆளுநரின் இத்தகைய அச்சுறுத்தலுக்குப் பின் பாஜகவின் சூழ்ச்சி இருப்பதாவும் குற்றம்சாட்டியுள்ளார்.

"குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த விரும்பினால், மணிப்பூரில், ஹரியானாவில் அதைச் செய்ய வேண்டும் என்று நான் ஆளுநரிடம் கூற விரும்புகிறேன். பஞ்சாப் அரசு அரசியலமைப்புச் சட்டத்தின் கட்டமைப்பிற்குள் செயல்படுகிறது. ஆளுநருக்கு ஒரே ஒரு திட்டம்தான் உள்ளது - பாஜக அல்லாத கட்சிகள் நடத்தும் மாநில அரசுகளை சீர்குலைக்கும் திட்டத்தையே அவர் முன்னெடுத்துச் செல்கிறார்" என்று ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் மல்விந்தர் சிங் கூறியுள்ளார்.

தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா போன்ற பாஜகவின் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களும் மாநில அரசின் செயல்பாட்டில் ஆளுநர் தலையிடுவதாக குற்றம்சாட்டுகின்றன. இப்போது பஞ்சாப் அரசைக் கலைப்பதாக மிரட்டும் பன்வாரிலால் புரோகித் தமிழ்நாட்டில் ஆளுநராக இருந்தவர் என்பது நினைவூட்டத்தக்கது. அப்போதும் அவர்மீது ஆளுநர் அதிகார வரம்பை மீறி செயல்படுதவாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

நாடு திரும்பியதும் முதல் விசிட் பெங்களூரு! இஸ்ரோ விஞ்ஞானிகளை நாளை சந்திக்கிறார் பிரதமர் மோடி!

PREV
click me!

Recommended Stories

கோவா தீ விபத்து: உயிரிழந்தோருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் – பிரதமர் மோடி அறிவிப்பு!
இன்றும் விமான ரத்துகள் இருக்கலாம்.. இண்டிகோவுக்கு டிஜிசிஏவின் அதிரடி நோட்டீஸ்! எப்போது சரியாகும்?