
பஞ்சாபில் கடந்த வாரம் தனது பிறந்தநாளில் கேக் சாப்பிட்ட 10 வயது சிறுமி, உணவு விஷமாகி உயிரிழந்தார் என்று சந்தேகிக்கப்படுகிறது. சிறுமியின் தங்கை உட்பட அவரின் முழு குடும்பமும் அந்த கேக் சாப்பிட்ட பிறகு நோய்வாய்ப்பட்டதாக இறந்த சிறுமியின் தாத்தா கூறியுள்ளார். பாட்டியாலாவில் உள்ள ஒரு பேக்கரியில் இருந்து அந்த கேக்கை ஆன்லைனில் ஆர்டர் செய்ததாக அவர் கூறினார்.
அந்த சிறுமி, இறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட வீடியோவில் தனது குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடுவதைக் காண முடிந்தது, பார்வையாளர்களுக்கு ரம் வேதனையை அளித்துள்ளது. மார்ச் 24 அன்று இரவு 7 மணியளவில் அவர் கேக் வெட்டியுள்ளார்.
தேர்வின் போது விடைத்தாளை காட்டாத மாணவருக்கு கத்தி குத்து!
அதே இரவு சுமார் 10 மணியளவில், அந்த முழு குடும்பமும் நோய்வாய்ப்பட்டது என்று அவரது தாத்தா ஹர்பன் லால் கூறினார். மேலும் அந்த இளம் சகோதரிகள் வாந்தி எடுக்கத் தொடங்கினர் என்றும் அவர் கூறினார். அந்த சிறுமி அதீத தாகத்தால் குடும்பத்தினரிடம் தண்ணீர் கேட்டுள்ளார். மேலும் தனது வாய் தொடர்ந்து வறட்சி அடைவதாக கூறியுள்ளார். பின்னர், சிறுமி தூங்கச் சென்றார் என்று அவர் மேலும் கூறினார்.
மறுநாள் காலை அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு ஆக்ஸிஜன் பொருத்தப்பட்டு, இதயத்தின் மின் செயல்பாட்டைப் பதிவு செய்யும் ஈசிஜி செய்யப்பட்டது என்று ஹர்பன் லால் கூறினார். ஆனால் அவர்களால் சிறுமியை காப்பாற்ற முடியவில்லை. விரைவில் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்ஹாவில் இருந்து ஆர்டர் செய்யப்பட்ட சாக்லேட் கேக்கில் விஷம் கலந்திருந்ததாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். பேக்கரி உரிமையாளர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. "உடலின் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கேக்கின் மாதிரியும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது மற்றும் அதன் அறிக்கைக்காக காத்திருக்கிறோம் என்று போலீசார் கூறினார்.
ஏப்ரல், மே மாதங்களில் வெப்ப அலை: இந்திய வானிலை ஆய்வு மையம்!