மக்களவைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கைக் குழு அறிவிப்பு!

By SG Balan  |  First Published Mar 30, 2024, 4:31 PM IST

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கைக் குழுப் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.


வரும் மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கைக் குழுப் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சரும் முன்னாள் பாஜக தலைவருமான ராஜ்நாத் சிங் தலைமையில் 27 பேர் கொண்ட குழுவை பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா அறிவித்தார்.

Tap to resize

Latest Videos

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இணை ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

भाजपा राष्ट्रीय अध्यक्ष श्री ने लोकसभा चुनाव-2024 के लिए चुनाव घोषणा-पत्र समिति का गठन किया है।

BJP National President Shri JP Nadda has announced Election Manifesto Committee for the Lok Sabha Elections - 2024. pic.twitter.com/KMrBpqkQQF

— BJP (@BJP4India)

மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், பூபேந்தர் யாதவ், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், அசாம் முதல்வர் ஹேமந்த பிஸ்வா சர்மா உள்ளிட்டோர் பாஜகவின் மக்களவைத் தேர்தல் அறிக்கைக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

பாஜக மூத்த தலைவர்களான வசுந்தரா ராஜே, ஸ்மிருதி இரானி, சிவராஜ் சிங் சவுகான், அர்ஜுன் முண்டா, அஷ்வினி வைஷ்ணவ், கிரண் ரிஜிஜு மற்றும் பலர் குழு உறுப்பினர்களாக உள்ளனர்.

இலவசங்கள் தேவையா? மக்களின் மனது மாறுகிறதா? ஆச்சரியம் அளிக்கும் ஏசியாநெட் நியூஸ் கருத்துக் கணிப்பு முடிவுகள்!!

click me!