Juice Jacking : பொது இடங்களில் உள்ள USB Chargers.. இந்தியாவில் உலவும் புது வகை மோசடி - எப்படி தப்பிப்பது?

By Ansgar R  |  First Published Mar 30, 2024, 6:35 PM IST

USB Charger Scam : விமான நிலையங்கள், கஃபேக்கள், ஹோட்டல்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் போன்ற பொது இடங்களில் போன் சார்ஜிங் போர்டல்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று குடிமக்களை மத்திய அரசு எச்சரித்துள்ளது.


வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில் பல சாதனைகளை நாம் கண்டு வரும் அதே நேரம், பல டிஜிட்டல் சங்கடங்களையும் எதிர்கொண்டு வருகின்றோம். இது குறித்து மத்திய அரசு ஒரு திடுக்கிடும் எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.

சைபர் குற்றவாளிகள், தீங்கிழைக்கும் நோக்கங்களுக்காக விமான நிலையங்கள், கஃபேக்கள், ஹோட்டல்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் போன்ற பொது இடங்களில் USB சார்ஜிங் போர்ட்களை பயன்படுத்துகின்றனர். இதை வல்லுநர்கள் "ஜூஸ்-ஜாக்கிங்" என்று அழைக்கின்றனர். சரி அப்படி என்றால் என்ன? இது எப்படி செயல்படுகிறது?

Tap to resize

Latest Videos

கருந்துளை ஆராய்ச்சியில் புதிய மைல்கல்! EHT தொலைநோக்கி பதிவுசெய்த புதிய படங்கள்!

மக்கள் பொது இடங்களில் உள்ள USB சார்ஜிங் சாதனங்களை பயன்படுத்தும்போது, இந்த ஜூஸ்-ஜாக்கிங் சைபர் தாக்குதல்களுக்கு ஆளாக்குகிறது இந்த புது வகை மோசடி. ஜூஸ் ஜாக்கிங் என்பது சைபர் தாக்குதல் உத்தி ஆகும், இதில் சைபர் குற்றவாளிகள் பொது USB சார்ஜிங் நிலையங்களைப் பயன்படுத்தி பயனர் தரவைத் திருட அல்லது அவற்றுடன் இணைக்கப்பட்ட சாதனங்களில் தங்களது மென்பொருள்களை நிறுவுகின்றனர்.

பயனர்கள் தங்கள் சாதனங்களை இதுபோன்ற சார்ஜிங் போர்ட்டுகளில் செருகும்போது, ​​இணைய குற்றவாளிகள் அந்த போனில் உள்ள தரவை திருடலாம்,  அல்லது இணைக்கப்பட்ட சாதனத்தில் தீம்பொருளை நிறுவலாம். இதனால் தனிப்பட்ட தகவல் திருடப்படுதல், மால்வேர் அல்லது ransomwareன் நிறுவல் மற்றும் பிற குற்றங்களுக்கு வழிவகுக்கலாம்.

பாதுகாப்பாக இருப்பது எப்படி?

சுவற்றில் பயன்படுத்தப்படும் சார்ஜிங் போர்ட்களை மட்டுமே பயன்படுத்தலாம், அல்லது தனிப்பட்ட கேபிள்கள் அல்லது பவர் பேங்க்களை எடுத்துச் செல்லலாம். உங்கள் சாதனத்தைப் பாதுகாக்கவும் அல்லது முறையாக லாக் மற்றும் அறியப்படாத சாதனங்களுடன் இணைவதைத் தவிர்க்கலாம். மேலும் இது போன்ற சைபர் மோசடி நடந்தால், www.cybercrime.gov.inல் புகாரளிக்கவும் அல்லது 1930க்கு அழைக்கவும்.

இன்ஸ்டாகிராமில் புதுசா வந்த வானிஷ் மோட்! எப்படி யூஸ் பண்றதுன்னு தெரிஞ்சுகோங்க!

click me!