புதுச்சேரியில் பதற்ற நிலை.. நள்ளிரவில் மின் ஊழியர்கள் கைது.. எஸ்மா சட்டத்தை அமல்படுத்த அரசு முடிவு..

By Thanalakshmi VFirst Published Oct 3, 2022, 10:57 AM IST
Highlights

மின் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர அரசு சார்பில் நடத்தப்பட்ட 2 கட்ட பேச்சுவாரத்தைகளும் தோல்வியடைந்த நிலையில் தற்போது புதுச்சேரியில் எஸ்மா சட்டத்தை அமல்படுத்த அனுமதி கேட்டு ஆளுநர் தமிழிசை ஒப்புதலுடன் உள்துறை அமைச்சகத்துக்கு ஆவணங்களை மாநில அரசு அனுப்பி வைத்துள்ளது. 
 

புதுச்சேரியில் மின்சாரத்துறை தனியார்மயமாக்கபடுவதை எதிர்த்து மின் ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையி புதுச்சேரி முழுவதும் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டு மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபடும் மின் ஊழியர்கள் துணைமின்நிலையங்களில் நுழைந்து மின்சார வயரை துண்டித்து, செயற்கை மின் தடையை ஏற்படுத்துவதாகவும் இதுபோன்ற செயலில் ஈடுபடும் நபர்கள் அடையாள காணப்பட்டு அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்திருந்தார். 

மேலும் படிக்க:சென்னையில் போதைப்பொருள் விற்ற நைஜீரிய பெண் கைது; ரூ.5.75 லட்சம் கொகைன் பறிமுதல்

ஆனால் இதனை வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் மின் ஊழியர்கள் மறுத்து உள்ளனர். இதனிடையே துணை ராணுவ படையினர் வரவழைக்கப்பட்டு, துணை மின்நிலையங்களில் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மின் துறை ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பாவிட்டால் இந்திய அத்தியாவசிய பராமரிப்பு சட்டம் (எஸ்மா) பாயும் என்று எச்சரிகை விடுத்திருந்தார் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் 

பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டு புதுச்சேரி நகர் முழுவதும் இருளில் முழ்கியது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து மின்துறையை தனியார்மயமாக்கப்படுவதை கண்டித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த 500 க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர். 

மேலும் படிக்க:பொய் வழக்கினால் பெண் தற்கொலை..! திமுகவினரை உடனே கைது செய்ய வேண்டும்- அண்ணாமலை ஆவேசம்

ஏற்கனவே மின் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர அரசு சார்பில் நடத்தப்பட்ட 2 கட்ட பேச்சுவாரத்தைகளும் தோல்வியடைந்த நிலையில் தற்போது புதுச்சேரியில் எஸ்மா சட்டத்தை அமல்படுத்த அனுமதி கேட்டு ஆளுநர் தமிழிசை ஒப்புதலுடன் உள்துறை அமைச்சகத்துக்கு ஆவணங்களை மாநில அரசு அனுப்பி வைத்துள்ளது. 

எஸ்மா சட்டம் என்பது அத்தியாவசிய சேவைகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள துறைகளில் பணிசெய்யும் உழியர்கள் வேலைநிறுத்தம், போன்ற போராட்டங்களில் ஈடுபடும் போது, மக்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்கும் வகையில் இந்த சட்டத்தின் மூலம் வாரண்ட் இல்லாமல் கைது செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.  இந்த சட்டத்தின் படி போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர். பிற தொழிலாளர்களுக்கு ஓராண்டு சிறை அல்லது 2 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்க இச்சட்டம் வகை செய்கிறது.

மேலும் படிக்க:சட்டசபை கூட்டத்தில் ஓபிஎஸ்- இபிஸ்க்கு எந்த வரிசையில் இடம்..? சபாநாயகர் அப்பாவுவின் புதிய தகவல்

click me!