85வது அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி மாநாட்டுக்கு வந்த பிரியங்கா காந்திக்கு 6 ஆயிரம் கிலோ ரோஜா இதழ்களால் ஆன ரோஸ்-கார்பெட் வரவேற்பு அளிக்கப்பட்டது.
சத்தீஸ்கார் மாநிலத்தில் நடைபெறும் காங்கிரஸ் கட்சி மாநாட்டுக்கு வருகை தந்த பிரியங்கா காந்திக்கு 6 ஆயிரம் கிலோ ரோஜா இதழ்களை வழி நெடுக தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.
சத்தீஸ்கார் மாநிலம் நவாராய்ப்பூர் நகரத்தில் 85வது அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி மாநாடு பிப்ரவரி 24 முதல் 26 வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. சனிக்கிழமை தொடங்கிய இந்தக் கூட்டத்தில் நாட்டில் அனைத்து பகுதிகளில் இருந்தும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்கின்றனர்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சனிக்கிழமை ராய்ப்பூர் நகருக்கு விமானத்தில் வந்தார். சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் அவரை வரவேற்றார். பிரியங்காவை வரவேற்க அவர் வரும் வழி முழுதும் பல மீட்டர் தொலைவுக்கு ரோஜா இதழ்கள் கொட்டப்பட்டிருந்தன.
பாகிஸ்தானில் ஆயுதப் பயிற்சி பெற திட்டமிட்டிருந்த தமிழர் உள்பட இருவர் கைது
பிரியங்கா சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த தொண்டர்களை நோக்கி புன்னகையுடன் கை அசைத்துக்கொண்டே காரில் ஊர்வலமாகச் சென்றார். இருபுறமும் நின்றிருந்த தொண்டர்களும் அவர் மீது ரோஜா இதழ்களைத் தூவி வரவேற்பு தெரிவித்தனர். பிரியங்கா காந்திக்கு இவ்வாறு ரோஜா மலர்களைத் தூவி அமோக வரவேற்பு அளித்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
இந்த ரோஜா விரிப்பு வரவேற்புக்கு ஏற்பாடு செய்தது ராய்ப்பூர் மேயர் ஐஜாஸ் தேபர் கூறுகையில், "சாலையை அலங்கரிக்க 6,000 கிலோவுக்கும் அதிகமான ரோஜா மலர்கள் பயன்படுத்தப்பட்டன. எங்கள் மூத்த தலைவர்களை வரவேற்க நான் எப்போதும் புதிதாக ஏதாவது செய்ய முயல்வேன்" என்றார்.
Bengaluru: பல்கலை விழாவில் நடனம் ஆடியபோது மயங்கி விழுந்த மாணவர் மரணம்
இது மட்டுமின்றி விமான நிலையத்திலிருந்து கூட்ட அமர்வுகள் நடைபெறும் இடம் வரையிலான சாலை, காங்கிரஸ் மூத்த தலைவர்களின் வண்ணமயமான படங்கள் மற்றும் வாசகங்களைத் தாங்கிய பதாகைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பாரத் ஜோடோ யாத்திரையின்போது நாட்டை ஒருங்கிணைக்கவும், அன்பைப் பரப்பவும் ராகுல் காந்தி மேற்கொண்ட பரப்புரை செய்திகளும் பதாகைகளில் இடம்பெற்றுள்ளன.
மூன்று நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தின் முதல் நாள் நிகழ்வில் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சட்டசபை, முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் உரையாற்றினர். காரியக் கமிட்டியில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர், பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு 50 சதவீதம் இடத்தை ஒதுக்கும் வகையில் கட்சி விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Invest in India: இந்தியாவில் முதலீடு செய்ய இதுதான் சரியான நேரம்! ஜெர்மனி தொழிலதிபர்கள் கருத்து