Fact Check: சுகாதரத் துறையில் 5% வரியா? மத்திய பட்ஜெட் பற்றிய குற்றச்சாட்டு உண்மையா?

By SG Balan  |  First Published Feb 26, 2023, 11:56 AM IST

டாக்டர் தேவி ஷெட்டி 2011 பட்ஜெட் பற்றி எழுதிய கடிதம் தவறான நோக்கத்தில் தற்போதைய பட்ஜெட்டை விமர்சிக்க பயன்படுத்தப்படுகிறது.


2023-24 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு 5 சதவீத வரி விதித்துள்ளதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தச் செய்தியுடன் டாக்டர் தேவி ஷெட்டியின் கடிதம் ஒன்றும் பகிரப்பட்டு வருகிறது.

ஆனால் அந்தச் செய்தி உண்மை ஏதும் இல்லை என்று பத்திரிகை தகவல் பணியகம் (PIB) தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது. "டாக்டர் தேவி ஷெட்டி, சமீபத்திய பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு 5 சதவீத வரி விதிக்கப்படுவதை எதிர்த்து ஒரு திறந்த மடல் எழுதியுள்ளார் என்று சிலர் சமூக ஊடகங்களில் செய்தியைப் பரப்புகிறார்கள்." என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Latest Videos

undefined

பாகிஸ்தானில் ஆயுதப் பயிற்சி பெற திட்டமிட்டிருந்த தமிழர் உள்பட இருவர் கைது

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ஜவஹர் சிர்காரும் தேவி ஷெட்டியின் பெயரிலான கடிதத்தை பகிர்ந்துள்ளதை படமெடுத்துக் காட்டியுள்ளது. அதில், "வரியை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். சுகாதார சேவைகள் மீது மோடி - நிர்மலா அரசு விதித்துள்ள சேவை வரி நடுத்தர வர்க்கத்தையும் ஏழைகளையும் அழித்துவிடும் என்ற டாக்டர் தேவி ஷெட்டியின் கருத்துடன் முற்றிலும் உடன்படுகிறேன். இந்த வரியைத் திரும்பப் பெறுங்கள்!" என்று ஜவஹர் சிர்கார் ட்வீட் செய்துள்ளார்.

A tweet claims that the central government has proposed a 5% tax on healthcare in the recent .

▪️ This claim is .

▪️ The letter attached with the tweet is from year 2011 and is being shared out of context. pic.twitter.com/uojvkR788H

— PIB Fact Check (@PIBFactCheck)

இதற்கு பதில் அளித்துள்ள பிஐபி, "சுகாதார சேவைகளுக்கு வரி விதிக்க மத்திய அரசு 5% வரி விதிப்பதாகக் கூறி இருப்பது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. இந்த ட்வீட்டுடன் இணைக்கப்பட்ட கடிதம் 2011ஆம் ஆண்டு வெளியானது. ஆனால் அந்த கடிதம் தற்போது பொருத்தமில்லாத சூழலில் பகிரப்படுகிறது" என்று கூறியுள்ளது.

2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அப்போதைய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி மருத்துவ சேவைகளுக்கு 5 சதவீத சேவை வரியை முன்மொழிந்தார். அதுகுறித்து டாக்டர் தேவி ஷெட்டி ஒரு கடிதம் எழுதினார். அதைத்தான் இப்போது பகிர்ந்து வருகிறார்கள் என்று பிஐபி சுட்டிக்காட்டுகிறது.

Invest in India: இந்தியாவில் முதலீடு செய்ய இதுதான் சரியான நேரம்! ஜெர்மனி தொழிலதிபர்கள் கருத்து

click me!