தென் கொரியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றுபவர்கள் ஒன்றாக இணைந்து நாட்டு நாட்டு பாடலுக்கு குத்தாட்டம் ஆடியுள்ள வீடியோவுக்கு பிரதமர் மோடி கமெண்ட் செய்துள்ளார்.
ராஜமவுலி இயக்கத்தில் கடந்தாண்டு ரிலீசாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். தமிழில் இரத்தம் ரணம் ரெளத்திரம் என பெயரிடப்பட்ட இப்படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நாயகர்களாக நடித்திருந்தனர். பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போட்ட இப்படம் உலகளவில் ரூ.1100 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது. ஆர்.ஆர்.ஆர். படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு அப்படத்தின் பாடல்களும் முக்கிய பங்காற்றி இருந்தன.
குறிப்பாக அப்படத்தில் இடம்பெறும் நாட்டு நாட்டு என்கிற பாடலுக்கு இன்றளவும் மவுசு குறையவில்லை. அந்த அளவுக்கு பட்டிதொட்டியெங்கும் அப்பாடல் பட்டையகிளப்பி வருகிறது. இப்பாடலுக்கு விருதுகளும் குவிந்து வருகின்றன. உலகின் இரண்டாவது உயரிய விருதாக கருதப்படும் கோல்டன் குளோப் விருது இப்பாடலுக்கு கிடைத்திருந்தது. சிறந்த ஒரிஜினல் பாடல் என்கிற பிரிவில் நாட்டு நாட்டு பாடலுக்கு விருது வழங்கப்பட்டு இருந்தது.
இதையும் படியுங்கள்... குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வார எலிமினேஷனில் நடந்த திடீர் டுவிஸ்ட்... இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!
இதுமட்டுமின்றி உலகளவில் மிக உயரிய சினிமா விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்காக இறுதி நாமினேஷன் பட்டியலிலும் இப்பாடல் இடம்பெற்று உள்ளது. அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆஸ்கர் விருது விழாவில் நாட்டு நாட்டு பாடலுக்கு நிச்சயம் விருது கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக ராஜமவுலி, இசையமைப்பாளர் கீரவாணி, நடிகர் ராம்சரண் ஆகியோர் தற்போது அமெரிக்காவில் முகாமிட்டுள்ளனர்.
Lively and adorable team effort. 👍 https://t.co/K2YqN2obJ2
— Narendra Modi (@narendramodi)இந்நிலையில் தென் கொரியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றுபவர்கள் ஒன்றாக இணைந்து நாட்டு நாட்டு பாடலுக்கு குத்தாட்டம் ஆடியுள்ள வீடியோ வெளியாகி சோசியல் மீடியாவில் செம்ம வைரல் ஆகி வந்தது. டுவிட்டரில் சுமார் 1 மில்லியன் பார்வைகளை கடந்து வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்த பிரதமர் மோடி தென் கொரிய தூதரக பணியாளர்களின் முயற்சிக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... சம்பளத்தை அதிரடியாக குறைத்த திரிஷா... லியோ படத்திற்காக அவர் வாங்கியது இவ்வளவு தானா?