நாளை மத்திய பிரதேசம் செல்லும் பிரதமர் மோடி, 5 வந்தேபாரத் ரயில்களை தொடங்கி வைக்க இருக்கிறார். மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.
அரசு முறை பயணமாக அமெரிக்கா மற்றும் எகிப்து சென்று திரும்பியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நாளை (ஜூன் 27) மத்திய பிரதேசம் செல்கிறார்.
தலைநகர் போபாலில் உள்ள ராணி கமலாபதி ரயில் நிலையத்திற்கு காலை 10.30 மணிக்கு வரும் பிரதமர் மோடி அங்கிருந்து 5 வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
அவை, ராணி கமலாபதி-ஜபல்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; கஜுராஹோ-போபால்-இந்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; மட்கான் (கோவா)-மும்பை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; தார்வாட்-பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; மற்றும் ஹதியா-பாட்னா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்.
மணிப்பூர் நிலவரம் குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கம் அளித்த அமித் ஷா!!
ராணி கமலாபதி-ஜபல்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், மகாகௌஷல் பகுதியை (ஜபல்பூர்) மத்தியப் பிரதேசத்தின் மத்திய மண்டலத்துடன் (போபால்) இணைக்கும். மேலும், பெரகாட், பச்மாரி, சத்புரா போன்ற சுற்றுலாத் தலங்களும் மேம்படுத்தப்பட்ட இந்த இணைப்பால் பயனடையும். இந்த ரயில் பாதையில் இருக்கும் அதிவேக ரயிலுடன் ஒப்பிடும்போது சுமார் முப்பது நிமிடங்கள் வேகத்தில் இந்த வந்தேபாரத் ரயில் பயணிக்கும்.
கஜுராஹோ-போபால்-இந்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், மால்வா பிராந்தியம் (இந்தூர்) மற்றும் புந்தேல்கண்ட் பிராந்தியம் (கஜுராஹோ) மத்தியப் பகுதியிலிருந்து (போபால்) இணைப்பை மேம்படுத்தும். இது மஹாகாலேஷ்வர், மண்டு, மகேஷ்வர், கஜுராஹோ, பன்னா போன்ற முக்கியமான சுற்றுலாத் தலங்களுக்கு இடையே பயணிக்கிறது. இந்த ரயில் பாதையில் இருக்கும் அதிவேக ரயிலை விட இரண்டு மணி நேரம் முப்பது நிமிடங்கள் வேகமாக இந்த வந்தேபாரத் ரயில் பயணிக்கும்.
மட்கான் (கோவா)-மும்பை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், கோவாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகும். இது மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் மற்றும் கோவாவின் மட்கான் ரயில் நிலையம் இடையே இயங்கும். இரண்டு இடங்களையும் இணைக்கும் தற்போதைய அதிவேக ரயிலுடன் ஒப்பிடும் போது, இது ஒரு மணிநேர பயண நேரத்தை குறைக்க உதவும்.
தார்வாட்-பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், கர்நாடகாவின் முக்கிய நகரங்களான - தார்வாட், ஹூப்பள்ளி மற்றும் தாவங்கேரே - மாநில தலைநகர் பெங்களூருவுடன் இணைக்கிறது. இது இப்பகுதியில் உள்ள சுற்றுலா பயணிகள், மாணவர்கள், தொழிலதிபர்கள் போன்றோருக்கு பெரிதும் பயனளிக்கும். இந்த ரயில் பாதையில் இருக்கும் அதிவேக ரயிலுடன் ஒப்பிடும்போது சுமார் முப்பது நிமிடங்கள் வேகத்தில் பயணிக்கிறது
ஹதியா-பாட்னா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், ஜார்கண்ட் மற்றும் பீகாருக்கான முதல் வந்தே பாரத் ரயிலாகும். பாட்னா மற்றும் ராஞ்சி இடையே இணைப்பை மேம்படுத்தும் இந்த ரயில் சுற்றுலா பயணிகள், மாணவர்கள் மற்றும் வணிகர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். இரண்டு இடங்களையும் இணைக்கும் தற்போதைய அதிவேக ரயிலுடன் ஒப்பிடும் போது, இது ஒரு மணி நேரம் இருபத்தைந்து நிமிட பயண நேரத்தை மிச்சப்படுத்த உதவும்.
ஷாஹ்டோலில் பிரதமர் மோடி!
ஷாஹ்டோலில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில், National Sickle Cell Anaemia Elimination Mission பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
National Sickle Cell Anaemia Elimination Mission 2023 யூனியன் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இது 17 மாநிலங்களில் உள்ள 278 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், ஒடிசா, தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, அசாம், உத்தரப் பிரதேசம், கேரளா, பீகார் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய நாட்டிலுள்ள மாநிலங்களில் கவனம் செலுத்தப்பட உள்ளது.
அமெரிக்கா, எகிப்து பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார் பிரதமர் மோடி..!
AB-PMJAY கார்டு விநியோகம்!
மத்தியப் பிரதேசத்தில் சுமார் 3.57 கோடி மதிப்பில் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB-PMJAY) அட்டைகளின் விநியோகத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார். ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கும் விழா மாநிலம் முழுவதும் உள்ள நகர்ப்புற அமைப்புகள், கிராம பஞ்சாயத்துகள் மற்றும் வளர்ச்சித் தொகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் அட்டை விநியோக பிரச்சாரமானது, நலத்திட்டங்கள் 100 சதவிகிதம் செறிவூட்டப்படுவதை உறுதிசெய்ய ஒவ்வொரு பயனாளியையும் சென்றடைய வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் ஒரு படியாகும்.
இந்த நிகழ்ச்சியின் போது, ‘ராணி துர்காவதி கௌரவ் யாத்ரா’ முடிவின் போது ராணி துர்காவதியை பிரதமர் கௌரவிக்கிறார். ராணி துர்காவதியின் வீரம் மற்றும் தியாகத்தை பிரபலப்படுத்துவதற்காக மத்திய பிரதேச அரசு இந்த யாத்திரையை ஏற்பாடு செய்துள்ளது. ராணி துர்காவதி, 16 ஆம் நூற்றாண்டின் மத்தியில் கோண்ட்வானாவின் ஆட்சி ராணி. முகலாயர்களுக்கு எதிராக சுதந்திரத்திற்காக போராடிய துணிச்சலான, அச்சமற்ற மற்றும் தைரியமான போர்வீரராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி, எகிப்து அதிபர் சந்திப்பு: இந்தியா - எகிப்து இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து!
பகாரியா கிராமத்தில் பிரதமர் மோடி!
ஒரு தனித்துவமான முன்முயற்சியில், பிரதமர் ஷாஹ்டோல் மாவட்டத்தின் பகாரியா கிராமத்திற்குச் சென்று பழங்குடி சமூகத்தின் தலைவர்கள், சுயஉதவி குழுக்கள், PESA [பஞ்சாயத்துகள் (திட்டமிடப்பட்ட பகுதிகளுக்கு விரிவாக்கம்) சட்டம், 1996] கமிட்டிகளின் தலைவர்கள் மற்றும் கிராம கால்பந்து கிளப்புகளின் தலைவர்களுடன் உரையாட இருக்கிறார். பழங்குடியினர் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களின் கலாச்சார நிகழ்ச்சிகளையும் பிரதமர் மோடி பார்வையிட இருக்கிறார்.