பிரதமர் மோடி 3 நாட்களில் 5 மாநிலங்களில் சுற்றுப்பயணம்!

By Manikanda Prabu  |  First Published Mar 3, 2024, 4:47 PM IST

பிரதமர் மோடி நாளை முதல் தெலங்கானா, தமிழ்நாடு, ஒடிசா, மேற்கு வங்கம், பீகார் ஆகிய மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்


பிரதமர் மோடி மார்ச் 4ஆம் தேதி (நாளை) முதல் 6ஆம் தேதி வரை தெலங்கானா, தமிழ்நாடு, ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். மார்ச் 4ஆம் தேதி காலை 10.30 மணியளவில், தெலங்கானா மாநிலம் அதிலாபாத்தில் ரூ.56,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

அதன்பிறகு பிற்பகல் 3.30 மணியளவில் பிரதமர் மோடி தமிழ்நாட்டின் கல்பாக்கம் செல்கிறார். மார்ச் 5ஆம் தேதி காலை 10 மணியளவில் ஹைதராபாத்தில் சிவில் விமானப் போக்குவரத்து ஆராய்ச்சி அமைப்பின் (CARO) மையத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். காலை 11 மணியளவில், தெலங்கானா மாநிலம் சங்காரெட்டியில் ரூ. 6,800 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

Latest Videos

undefined

பிற்பகல் 3.30 மணியளவில், ஒடிசா மாநிலம் ஜஜ்பூரில் உள்ள சண்டிகோலில் ரூ.19,600 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மார்ச் 6ஆம் தேதி காலை 10.15 மணியளவில், கொல்கத்தாவில் ரூ.15,400 கோடி மதிப்பிலான பல்வேறு போக்குவரத்து இணைப்புத் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுகிறார். அதன்பிறகு, பிற்பகல் 3.30 மணியளவில், பீகார் மாநிலம் பெட்டியாவில் ரூ.8,700 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

தெலங்கானா, ஆந்திராவில் பிரதமர் மோடி


தெலங்கானா மாநிலம் அதிலாபாத்தில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில், மின்சாரம், ரயில்வே மற்றும் சாலைத் துறை தொடர்பான ரூ.56,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டுகிறார். இந்த திட்டங்களில் மின் துறை முக்கிய அம்சமாக இடம்பெறுகிறது.

பாகிஸ்தான் பிரதமராக இரண்டாவது முறையாக ஷெபாஸ் ஷெரீப் தேர்வு!

நாடு முழுவதும் மின்சாரத் துறை தொடர்பான பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, பல புதிய திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டி வருகிறார். அந்த வகையில் தெலங்கானா மாநிலம் பெத்தபள்ளியில் என்டிபிசி-யின் 800 மெகாவாட் (அலகு-2) தெலுங்கானா சூப்பர் அனல் மின் திட்டத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். புதிதாக மின்மயமாக்கப்பட்ட அம்பரி – அதிலாபாத் – பிம்பால்குதி ரயில் பாதையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். தேசிய நெடுஞ்சாலை எண் 353பி மற்றும் தேசிய நெடுஞ்சாலை 163 மூலம் தெலுங்கானாவை மகாராஷ்டிராவுடனும், தெலங்கானாவை சத்தீஸ்கருடனும் இணைக்கும் இரண்டு பெரிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

இதுதவிர, இந்த விழாவின்போது, ராஜஸ்தான், சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களிலும் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

ஹைதராபாத்தில் உள்ள சிவில் விமானப் போக்குவரத்து ஆராய்ச்சி அமைப்பின் (CARO) மையத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை மேம்படுத்தவும் இந்திய விமான நிலைய ஆணையத்தால் ஹைதராபாத்தில் உள்ள பேகம்பேட் விமான நிலையத்தில் இது அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, சங்காரெட்டியில் ரூ.6,800 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்தத் திட்டங்கள் சாலை, ரயில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற பல்வேறு முக்கிய துறைகளை உள்ளடக்கியது.

தமிழ்நாட்டில் பிரதமர் மோடி


இந்தியாவின் அணுமின் திட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட இந்தியாவின் உள்நாட்டு முன்மாதிரி வேக ஈனுலையில் (PFBR) கோர் லோடிங்  பணியை பிரதமர் பார்வையிடவுள்ளார். இந்த அணு உலை செயல்பாட்டிற்கு வந்தால், ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக வணிக ரீதியில் இயங்கும் அதிவேக அணு உலையை கொண்ட இரண்டாவது நாடாக இந்தியா இருக்கும்.

ஒடிசாவில் பிரதமர் மோடி


ஒடிசா மாநிலம் சண்டிகோலில் ரூ.19,600 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டுகிறார். எண்ணெய் மற்றும் எரிவாயு, ரயில்வே, சாலை, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் அணுசக்தி உள்ளிட்ட துறைகளுடன் இந்த திட்டங்கள் தொடர்புடையவை.

கொல்கத்தாவில் பிரதமர்


நகர்ப்புற போக்குவரத்தை எளிதாக்குவதற்கான வழிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் வகையில், கொல்கத்தா மெட்ரோவின் ஹவுரா மைதானம் – எஸ்பிளனேட் மெட்ரோ பிரிவு, கவி சுபாஷ் – ஹேமந்தா முகோபாத்யாய் மெட்ரோ பிரிவு, தரடாலா – மஜெர்ஹாட் மெட்ரோ பிரிவு (ஜோகா – எஸ்பிளனேட் பாதையின் ஒரு பகுதி) ஆகியவற்றை பிரதமர் தொடங்கி வைக்கிறார். ரூபி ஹால் கிளினிக் முதல் ராம்வாடி நீட்டிப்பு வரை புனே மெட்ரோ; கொச்சி மெட்ரோ ரயில் கட்டம் I நீட்டிப்பு திட்டம், எஸ்என் சந்திப்பு மெட்ரோ நிலையத்திலிருந்து திரிபுனிதுரா மெட்ரோ நிலையம் வரை; ஆக்ரா மெட்ரோவின் தாஜ் கிழக்கு வாயில் முதல் மன்கமேஷ்வர் வரை நீட்டிப்பு; மற்றும் டெல்லி-மீரட் ஆர்ஆர்டிஎஸ் வழித்தடத்தின் துஹாய்-மோடிநகர் (வடக்கு) பிரிவு. இந்த பிரிவுகளில் ரயில் சேவைகளை அவர் கொடியசைத்து தொடங்கி வைப்பார். பிம்ப்ரி சின்ச்வாட் மெட்ரோ – நிக்டி இடையே புனே மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்ட விரிவாக்கப் பணிக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

பாஜக தேர்தல் நிதி: ரூ.2000 நன்கொடை அளித்த பிரதமர் மோடி!

பீகார் மாநிலத்தில் பிரதமர்


பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள பெட்டியாவில் சுமார் ரூ. 8,700 கோடி மதிப்பிலான ரயில், சாலை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு தொடர்பான பல்வேறு உள்கட்டமைப்பு தொடர்பான திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, தொடங்கி வைக்கிறார்.

click me!