Neet ஒத்திவைப்பு தீர்மானத்தின் மீது PM Modi பதில் அளித்திருக்க வேண்டும்! - கலாநிதி வீராசாமி வலியுறுத்தல்

By Dinesh TG  |  First Published Jul 22, 2024, 11:53 AM IST

காங்கிரஸ் எம்பி மாணிக்க தாகூர், கலாநிதி வீராசாமி கொண்டு வந்த நீட் தேர்வு ஒத்திவைப்பு தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது பதிலளித்த தர்மேந்திர பிரதான், நீட்தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எந்த ஆதாரமும் இல்லை என விளக்கம் அளித்தார்.
 


நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இன்று, பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். மக்களவை கூட்டத்தொடர் தொடங்கியதும், நீட் முறைகேடு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்பியும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மக்களவையில் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, காங்கிஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், நீட் ஒத்திவைப்பு தீர்மாணம் கொண்டுவந்தார். இந்த தீர்மானம் குறித்த பதிலளித்துப் பேசிய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்,

Neet Exam | நீட் தேர்வு குளறுபடி - உச்சநீதிமன்றத்தில் இறுதி விசாரணை! விரைவில் தீர்ப்பு!

பொதுத் தேர்வு மசோதாவை முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு ஏன் கொண்டுவரவில்லை? என்று கேள்வி எழுப்பினார். மேலும், நீட் தேர்வில் தற்போது நடந்த சிறு சிறு பிழைகள் கூட இனி வரும் காலங்களில், அடுத்த தேர்வுகளில் நடக்காமல் இருக்க நடவடிக்கை முறைப்படி எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். காங்கிரஸ் அரசு ஆட்சியிலிருந்து போது செய்த தவறுகளை எங்கள் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு சரி செய்து வருகிறது என்றும் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். மேலும், நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

தொடர்ந்து பேசிய திமுக எம்பி கலாநிதி வீராசாமி, நீட் தேர்வு முறைகேட்டால் தமிழகத்தில் அனிதா உட்பட பல மரணங்கள் தொடர்வதாக கூறினார். இந்த நீட் விவாதத்தில் பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Latest Videos

undefined

Anbumani : ஒரு பிழைக்கு மாற்றாக இன்னொரு பிழையா.? இனி இரண்டு நீட் தேர்வு நடத்துவதா.? சீறும் அன்புமணி

NEET UG 2024 தேர்வு முடிவுகள் வெளியானது! தேர்வு மையம் வாரியாக மதிப்பெண்களை சரிபார்ப்பது எப்படி?

 

click me!