Neet Exam | நீட் தேர்வு குளறுபடி - உச்சநீதிமன்றத்தில் இறுதி விசாரணை! விரைவில் தீர்ப்பு!

By Dinesh TG  |  First Published Jul 22, 2024, 11:34 AM IST

Neet Exam Row | நீட் எனப்படும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வில் முறைகேடு நடந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அறிவிக்கிறது. இதனிடையே, நீட் தோ்வில் சுமார் 2,250 மாணவா்கள் ஒரு மதிப்பெண்கூட பெறவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.
 


NEET UG தேர்வில் முறைகேடுகள் மற்றும் குளறுபடிகள் நடந்ததாக போர்கொடி எழுந்ததையடுத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நடைபெற்று வருகிறது. தலைமை நீதிபதி DY சந்திரசூட், நீதிபதி ஜேபி பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணை இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீட் தேர்வுகள், கடந்த மே 5-ம் தேதி நாடு முழுவதும் உள்ள 557 நகரங்களில், மொத்தம் 4,750 மையங்களில் 23 லட்சத்திற்கும் அதிகமான மாணவா்கள் தோ்வெழுதினா். அண்மையில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தேர்வு நகரங்கள் மற்றும் மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவுகளை தேசிய தோ்வு முகமை NTA வெளியிட்டது.

இந்த முடிவுகளின் அடிப்படையில் சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. நீட் தோ்வெழுதிய சுமார் 2,250க்கும் மேற்பட்ட தேர்வர்கள் ஒரு மதிப்பெண்கூட பெறவில்லை. 9 ஆயிரத்து 400க்கும் அதிகமான மாணவா்கள் மைனஸ் நெகடிவ் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

Anbumani : ஒரு பிழைக்கு மாற்றாக இன்னொரு பிழையா.? இனி இரண்டு நீட் தேர்வு நடத்துவதா.? சீறும் அன்புமணி

இதுகுறித்து, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கையில், ‘மாணவா்கள் ஒரு மதிப்பெண்கூட பெறாதது என்பது அவா்கள் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்கவில்லை என்று அா்த்தமல்ல. அவா்கள் சில கேள்விகளுக்கு சரியான பதில் அளித்தும், மற்ற, சில கேள்விகளுக்கு தவறான பதில் அளித்திருக்கலாம். சரியான பதில்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டு, தவறான பதில்களுக்கு மதிப்பெண் குறைக்கப்படுவதே அவா்களது மொத்த மதிப்பெண் பூஜ்ஜியம் ஆனதற்கு காரணமாக இருக்கக் கூடும் என்கின்றனர்.

நீர் தேர்வு வினாத்தாள் கசிவு நடைபெற்ற மையமாக கருதப்படும் ஜாா்க்கண்ட், ஹசாரிபாக்கில் உள்ள தனியாா் பள்ளியில் தோ்வெழுதிய பல தேர்வர்கள் நெகடிவ் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். பிகார் மாநிலத்தில் நீட் தோ்வு எழுதிய மாணவா் ஒருவா் மைனஸ் -180 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். நீட் தேர்வில் இதுவே மிகக் குறைந்த மதிப்பெண்களாக கருதப்படுகிறது.

Latest Videos

NEET UG 2024 தேர்வு முடிவுகள் வெளியானது! தேர்வு மையம் வாரியாக மதிப்பெண்களை சரிபார்ப்பது எப்படி?

உச்சநீதிமன்றத்தில் விசாரணை

NEET UG 2024 தேர்வின் நேர்மை தன்மை பாதிக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டால் மட்டுமே, மறுதேர்வு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூலை 18 விசாரணையின் போது, CBI மற்றும் NTA-விற்கு ​உச்சநீதிமன்றம் பல்வேறு கேள்வி எழுப்பியிருந்தது. வழக்கு விசாரணை இன்று தொடங்கியுள்ள நிலையில், சிபிஐ பதிலளித்து வருகிறது. உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!