இமாச்சலப் பிரதேசத்தில் பிலாஸ்பூரில் ரூ.1,470 கோடியில் அமைக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
இமாச்சலப் பிரதேசத்தில் பிலாஸ்பூரில் ரூ.1,470 கோடியில் அமைக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
பிரதமர் மோடி இமாச்சலப்பிரதேச மாநிலத்துக்கு இன்று ஒருநாள் பயணமாக வந்துள்ளார். அங்கு உள்ள குலு மாவட்டத்தில் தால்பூர் மைதானத்தில் இன்று நடக்கும் சர்வதேச தசரா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி முதல்முறையாகப் பங்கேற்க உள்ளார்.
இமாச்சலில் நாளை நடக்கும் தசரா பண்டிகை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி முதல்முறையாகப் பங்கேற்பு
இந்த தசரா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பது இதுதான் முதல்முறையாகும். தசரா பண்டிகையின்போடுத 300 சாமி சிலைகளின் மிகப்பெரிய ரத யாத்திரையும் நடக்கும் என்பதால், சர்வதேச அளவில் பார்வையாளர்கள் வருவார்கள். அது மட்டுமல்லாமல் இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள பிலாஸ்பூரில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையையும் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து அதை பார்வையிட்டார்.
பிரதமர் நிகழ்ச்சிக்கு வரும் பத்திரிகையாளர்களிடம் ‘ஒழுக்கச் சான்று’! யுடர்ன் அடித்த இமாச்சல் போலீஸார்
இந்த மருத்துவமனை ரூ.1470 கோடி மதிப்பில் உருவாகியுள்ளது. 18 சிறப்பு சிகிச்சைவார்டுகளும், 17சூப்பர் ஸ்பாஷலிட்டி பிரிவுகளும், 18 நவீன அறுவை சிகிச்சை மையங்களும் உள்ளன. இந்த மருத்துவமனையில் 750 படுக்கைகள், 64 ஐசியு படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
247 ஏக்கரில் உருவாகியுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் 24 மணிநேரமும் இயங்கும் அவசரசிகிச்சைப் பிரிவும் உள்ளது. இது தவிர டயாலிசிஸ் பிரிவு, அல்ட்ரோசோனோகிராபி சிகிச்சை முறை, சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ உள்ளிட்ட நவீந பரிசோதனை முறைகளும் உள்ளன. அம்ரித் மருந்துக்கூடம், ஜன் அவுசதி மையம், ஆயுர்வேத மருத்துவத்து சிகிச்சைக்காக 30 படுக்கைகளும் உள்ளன.
இமாச்சலப் பிரதேச மக்கள் குலு தசரா அரங்கில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பை அளித்தனர். pic.twitter.com/FMlZVRzlOK
— Asianetnews Tamil (@AsianetNewsTM)சூதாட்ட இணையதள விளம்பரங்களைத் தவிருங்கள்: செய்தி இணையதளங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள பூர்வீகக் குடிகள், பழங்குடியினர் ஆகியோருக்கு டிஜிட்டல் சுகாதார மையத்தையும் மருத்துவமனை அமைத்துள்ளது. போக்குவரத்து தொடர்பு இல்லாத மலைப்பகுதியான காசா, சலூனி, கெய்லாங் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மருத்துவ சிகிச்சை வழங்க தனியாக சிறப்பு பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனைக் கல்லூரியில் 100 மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கும், 60 மாணவர்கள் நர்ஸிங் பிரிவுக்கும் அனுமதிக்கப்படுவார்கள்.