சிறுபான்மையினருக்கு நாங்கள் எதிரிகளா? இந்து ராஷ்ட்டிரம் என்பதை வலியுறுத்திக் கொண்டே இருப்போம்.. RSS தலைவர்.

Published : Oct 05, 2022, 12:01 PM ISTUpdated : Oct 05, 2022, 01:56 PM IST
சிறுபான்மையினருக்கு நாங்கள் எதிரிகளா? இந்து ராஷ்ட்டிரம் என்பதை வலியுறுத்திக் கொண்டே இருப்போம்.. RSS தலைவர்.

சுருக்கம்

ஆர்எஸ்எஸ் என்ற அமைப்பு இஸ்லாமியர்களுக்கு எதிரானது என சிலர் பயமுறுத்துகின்றனர் ஆனால் அது உண்மை அல்ல என்றும், சகோதரத்துவம், நட்பு மற்றும் அமைதியின் பக்கம் நிற்பது தான் ஆர்எஸ்எஸ் என அந்த அமைப்பின் தேசிய தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் என்ற அமைப்பு இஸ்லாமியர்களுக்கு எதிரானது என சிலர் பயமுறுத்துகின்றனர் ஆனால் அது உண்மை அல்ல என்றும், சகோதரத்துவம், நட்பு மற்றும் அமைதியின் பக்கம் நிற்பது தான் ஆர்எஸ்எஸ் என அந்த அமைப்பின் தேசிய தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். இந்து ராஷ்டிரம் என்ற கருத்தை பலர் எதிர்க்கின்றனர், ஆனாலும் அதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது. அதில் ஆர்எஸ்எஸின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையின் விவரம் பின்வருமாறு:-  எல்லாத் துறைகளிலும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும், பெண்கள் இல்லாமல் இந்த சமுதாயம் வளரவே முடியாது, இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது அந்நாட்டிற்கு நாம் உதவிய விதம் மற்றும் ரஷ்யா உக்ரைன் போரில் எடுத்த நிலைப்பாடு, சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியிருக்கிறது.

மாற்றம் என்பதே உலகத்தில் நியதியாக உள்ளது, ஆனால் சனாதன தர்மத்தில் நாம் உறுதியாக இருக்க வேண்டும், சனாதன தர்மத்தின் வளர்ச்சிக்கு தடைகள் நாட்டின் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் விரோதமான சக்திகளால் உருவாகிறது, பலர் பல போலி கதைகளை சனாதனத்திற்கு எதிராக  பரப்பி வருகின்றனர். சமூக நல்லிணக்கத்தை சீரழிப்பது, குற்றங்களில் ஈடுபடுவது,  பயங்கரவாதத்தை தூண்டுவது போன்ற செயல்களை பலர் ஊக்குவிக்கின்றனர். நாட்டின் வளர்ச்சிக்கு எதிர்காலத்தில் ஆங்கிலம் தேவை என்பது எனது நம்பிக்கை.

புதிய கல்விக் கொள்கை மாணவர்களை தேசப்பற்று உள்ளவர்களாக வளர்க்கும், இதற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். மக்கள் தொகை என்பது ஒரு நாட்டின் வளமாகவே பார்க்க வேண்டும். மத ரீதியான மக்கள் தொகை சமநிலை இன்மை, புவியியல் ரீதியாக எல்லைகளை மாற்ற வாய்ப்பு உள்ளது. கவர்ச்சியான ஆசைகளைக் காட்டி மத மாற்றம் செய்யப்படுவது தடுக்கப்படவேண்டும்,  இந்து ராஷ்டிரம் என்பது அனைத்து நிலைகளிலும் ஒளிக்கிறது. ஆனால் இதற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் குரல்கள் எழுகிறது. ஆனால் இந்து ராஷ்டிரம் என்பதில் நாம் உறுதியாக இருப்போம் .

கோயில், தண்ணீர், மயானம் ஆகியவை அனைவருக்கும் பொதுவானது. சிறிய விஷயங்களுக்காக நாம் மோதிக் கொள்ளக் கூடாது, ஆர்எஸ்எஸ்சால் சிறுபான்மையினருக்கு ஆபத்து என சிலர் பயமுறுத்தி வருகின்றனர். அதில் உண்மை இல்லை, சமத்துவம் சகோதரத்துவம் நட்புறவு அமைதியின் பக்கம் இருப்பது ஆர் எஸ் எஸ்ஸின் இயல்பு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

காரில் ஹெல்மெட் அணியவில்லை என அபராதம்! ஆக்ரா போலீஸ் அட்டூழியம்!
இண்டிகோ விமானத்தில் புகுந்த புறா! நடுவானில் பயணிகளுக்கு ஆச்சரியம்!