காங்கிரஸ் தலைவர் தேர்தலில் இருந்து திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூரை விலகிக்கொள்ளுமாறு ராகுல் காந்தி மூலம் நெருக்கடி தரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து சசி தரூர் விளக்கம் அளித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் இருந்து திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூரை விலகிக்கொள்ளுமாறு ராகுல் காந்தி மூலம் நெருக்கடி தரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து சசி தரூர் விளக்கம் அளித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டு மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும், திருவனந்தபுரம் எம்.பி.சசி தரூரும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். இதில் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் மேலிடத்தால் நிறுத்தப்பட்டதால், பெருவாரியான ஆதரவு அவருக்குகிடைக்கும் எனத் தெரிகிறது.
இருப்பினும் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிருக்க வேண்டும் என்பதால், சசி தரூர் போட்டியிடுகிறார். வரும் 17ம் தேதி வாக்குப்பதிவும், 19ம் தேதி தேர்தல் முடிவு அறிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் இருந்து சசி தரூரை விலகிக்கொள்ளுமாறு ராகுல் காந்தி மூலம் நெருக்கடி கொடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. தற்போது ராகுல் காந்தி பாரத் ஜோடோ நடைபயணத்தில் கர்நாடக மாநிலத்தில் உள்ளார்.
இது குறித்து திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூர் நேற்று நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் விளக்கம் அளித்ததாவது:
காங்கிரஸ் கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் சிலர் ராகுல் காந்தியிடம் சென்று “ நீங்கள் கூறினால், சசி தரூர் தேர்தலில் இருந்து வாபஸ் பெற்றுவிடுவார் ஆதலால் நீங்கள் அவரிடம் பேசுங்கள்” என்று தெரிவித்துள்ளனர்.
ஆனால், ராகுல் காந்தி அவ்வாறு நான் சசி தரூரிடம் சென்று போட்டியிலிருந்து விலகிக்கொள்ளுங்கள் என்று கூறமாட்டேன். தலைவர் தேர்தலுக்கு போட்டி வருவது கட்சிக்கு ஆரோக்கியமானது என்று தெரிவித்துள்ளார்.
உண்மையில், ராகுல் காந்தி என்னிடம் முன்பு பேசும்போது, காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 10 ஆண்டுகளாகத் தலைவர் தேர்தலை நடக்காமல் இருக்கிறது. தலைவர் பதவிக்கு போட்டி வர வேண்டும் என்று என்னிடம் தெரிவித்திருந்தார்
அப்படியிருக்கும்போது, ராகுல் காந்தி எப்படி கூறுவார். அதுமட்டுமல்லாமல் ராகுல் காந்தி சமீபத்தில் என்னிடம் பேசுகையில், “ என்னிடம் வந்து சில மூத்த தலைவர்கள், சசிதரூரை தேர்தலில் இருந்து வாபஸ் பெறுமாறு நீங்கள் கூறினால் அவர் விலகிவிடுவார் கூறுங்கள்” என்று கேட்டுக்கொண்டனர்.
ஆனால், அவரோ அவ்வாறு செய்யமாட்டேன், சசி தருரிடம் பேசமாட்டேன் என மறுத்துவிட்டார். “நான் தேர்தலில் இருந்து வாபஸ் பெறக்கூடாது என்றும், தேர்தலில் போட்டியிட வேண்டும்” என்றும் ராகுல் காந்தி என்னிடம் தெரிவித்தார்.
10 பேர் பயங்கர தீவிரவாதிகள்: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
நான் எந்த பெரிய தலைவர்களிடம் இருந்தும் ஆதரவை எதிர்பார்க்கவில்லை, எதிர்பார்க்கவும்மாட்டேன். நாக்பூர், வர்தா, ஹைதராபாத்தில் உள்ள தொண்டர்களைச் சந்தித்துப் பேசினேன். அவர்களும் என்னை தேர்தலில் போட்டியிடக் கூறினார்கள், வாபஸ் பெறாதீர்கள் என்றனர். நானும் வாபஸ் பெறமாட்டேன் என உறுதியளித்தேன். இந்த நம்பிக்கையும், ஆதரவும்தான் என்னை முன்னோக்கி நகர்த்துகிறது
இவ்வாறு சசி தரூர் தெரிவித்தார்