உத்தராகண்ட் மாநிலத்தின் பவுரி கர்வால் மாவட்டத்தில் உள்ள டிமாரி பகுதியில் நிகழ்ந்த கோர விபத்தில் 25 பேர் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள லால்தங் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக 40 பேர் பேருந்தில் சென்றுள்ளனர். திருமணம் முடிந்து நேற்று இரவு அனைவரும் பேருந்தில் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்த போது பவுரி கர்வால் மாவட்டத்தில் உள்ள டிமாரி என்கிற கிராமத்தின் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, அருகில் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப்படையினர், மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதில் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... போலீசார் தடுத்து நிறுத்தியதால் பைக்கை கொளுத்திய நபர்… ஹைதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்… வைரல் வீடியோ!!
திருமண நிகழ்விற்கு சென்று திரும்பியபோது நிகழ்ந்த இந்த கோர விபத்து அப்பகுதி மக்களை துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. விபத்து தொடர்பாக விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. இரவில் விபத்து நிகழ்ந்ததால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டதாகவும், தற்போது தான் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 இந்தியர்கள் கடத்தல்… கலிபோர்னியாவில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!