போலீசார் தடுத்து நிறுத்தியதால் பைக்கை கொளுத்திய நபர்… ஹைதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்… வைரல் வீடியோ!!

By Narendran S  |  First Published Oct 4, 2022, 6:28 PM IST

போக்குவரத்து விதிமீறலுக்காக நிறுத்தப்பட்டதால் விரக்தியடைந்த வாகன ஓட்டி தனது மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த சம்பவம் ஹைதராபாத்தில் அரங்கேறியுள்ளது. 


போக்குவரத்து விதிமீறலுக்காக நிறுத்தப்பட்டதால் விரக்தியடைந்த வாகன ஓட்டி தனது மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த சம்பவம் ஹைதராபாத்தில் அரங்கேறியுள்ளது. ஹைதராபாத் போக்குவரத்து காவல்துறை இன்று முதல் ஹைதராபாத்தில் 'ஆபரேஷன் ரோப்' செயல்படுத்துகிறது. இதை அடுத்து இன்று காலை முதல் போலீசார், ஹைதராபாத் நகரின் பல இடங்களில் ஆபரேஷன் ரோப் என்ற பெயரில் சிறப்பு சோதனை நடத்தினர். போக்குவரத்து விதிகளை (புதிய போக்குவரத்து விதிகள்) பின்பற்றாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. டிராபிக் விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து போலீஸார் கடும் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் ஸ்டாப் லைனை கடந்து, பாதசாரிகளுக்கு இடையூறாக சென்ற வாகன ஓட்டிகளுக்கு, 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: நவராத்திரியையொட்டி அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்… இணையத்தில் வைரலாகும் ஆந்திரா கோயில்!!

Tap to resize

Latest Videos

இந்த நிலையில், நேற்று காலை முதல் நகரின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு வாகனம் ஓட்டும் பணி நடைபெற்று வந்த நிலையில், சில வாகன ஓட்டிகள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களில் சிலர் போலீசார் மீது ஆத்திரம் கொண்டு சொந்த வாகனங்களை தீவைத்து கொளுத்தினர். தெலங்கானாவின் ஐதராபாத்தின் வடமேற்கில் அமைந்துள்ள அமீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குள் இதுபோன்ற இரண்டு சம்பவங்கள் நடந்துள்ளன. மைத்ரிவனம் சந்திப்பில் உள்ள ஆதித்யா என்கிளேவில் அசோக் என்ற நபர் மொபைல் கடை நடத்தி வருகிறார். அசோக் ராங் ரூட்டில் வந்து கொண்டிருந்தபோது, அவரைக் கவனித்த போக்குவரத்து போலீஸார் உடனடியாக தடுத்து நிறுத்தினர்.

இதையும் படிங்க: உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்கிய 11 பேரின் கதி என்ன? முதல்வர் புஷ்கர் சிங் தாமி அதிர்ச்சி தகவல்!!

வண்டியை நிறுத்திய அசோக் ஆத்திரமடைந்தார். போக்குவரத்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போலீசார் மீது கடும் கோபத்தில் இருந்த அசோக், பெட்ரோல் டேங்கின் பைப்பை இழுத்து லைட்டரால் தீ வைத்து எரித்தார். இதனால், தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. உடனடியாக தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார், அருகில் உள்ள கடைக்கு தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைத்தனர். பின்னர், அசோக் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதேபோல் எஸ்ஸார்நகரிலும் வாகன ஓட்டி ஒருவர் அவரது வாகனத்தை நோ பார்க்கிங்கில் நிறுத்தியதை அடுத்து போலீசார் அபராதம் விதித்தனர். இதனால், வாகன ஓட்டி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

click me!