நவராத்திரி பண்டிகையையொட்டி ஆந்திராவில் உள்ள அம்மன் கோயில் ஒன்றில் சுவாமிக்கு சுமார் 8 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
நவராத்திரி பண்டிகையையொட்டி ஆந்திராவில் உள்ள அம்மன் கோயில் ஒன்றில் சுவாமிக்கு சுமார் 8 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆந்திராவின் விசாகப்பட்டினம் பகுதியில் உள்ள மேற்கு கோதாவரி பகுதியில் வாசவி கன்யாகா கோயில் ஒன்று உள்ளது. 135 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த கோயிலில் வருடம்தோறும் நவராத்திரி பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அங்குள்ள அம்மனுக்கு வெகு விமர்சையாக அலங்காரம் செய்யப்படுவது வழக்கம்.
இதையும் படிங்க: உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்கிய 11 பேரின் கதி என்ன? முதல்வர் புஷ்கர் சிங் தாமி அதிர்ச்சி தகவல்!!
அந்த வகையில் இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை செப். 26 ஆம் தொடங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. இதை அடுத்து வாசவி கன்யகா பரமேஸ்வரி கோயிலில் அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அம்மன் சிலையை சுற்றி 2,000, 500, 100 நோட்டுகளை கட்டுக்கட்டாக அடுக்கி வைத்துள்ளனர். இவ்வாறு அடுக்கி வைக்கப்பட்ட நோட்டுகளின் மொத்த மதிப்பு 8 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. கோயிலில் சுவாமி சிலைகளை தங்கத்தில் செய்து ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு வழிபாடுகள் செய்வது வழக்கம்.
இதையும் படிங்க: நாளை தேசிய கட்சி தொடங்குகிறார் சந்திரசேகர் ராவ்… மக்களுக்கு மதுபாட்டில் மற்றும் கோழி கொடுத்து அசத்தல்!!
ஆனால் வாசவி கன்யகா பரமேஸ்வரி கோயிலில் அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதுக்குறித்து கோயில் நிர்வாகம் பேசுகையில், அலங்காரம் செய்யப்பட்டுள்ள 8 கோடி ரூபாய் ரொக்கம் அனைத்தும் பொது மக்களின் நன்கொடையால் வழங்கப்பட்டுள்ளதால், நவராத்திரி பூஜை முடிந்ததும் இதை கோயில் நிர்வாகம் திருப்பி தந்துவிடுவார்கள். கோயில் நிர்வாகம் இந்த பணத்தை எடுத்துக்கொள்ளாது என்று தெரிவித்துள்ளது.