பிரணாப் முகர்ஜி , ராகுல் காந்தி அஞ்சலி

 
Published : Dec 06, 2016, 04:23 PM ISTUpdated : Sep 19, 2018, 02:34 AM IST
பிரணாப் முகர்ஜி , ராகுல் காந்தி அஞ்சலி

சுருக்கம்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடலுக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அஞ்சலி செலுத்தினார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்த அவர் முதல்வரின் உடல் வைக்கபட்டிருந்த ராஜாஜி அரங்கிற்கு வருகை தந்தார்.

பின்னர் பிரணாப் முகர்ஜி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதுடன் சசிகலாவுக்கு ஆறுதல் கூறினார்.

முன்னதாக காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி , காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைவர் குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக்,

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் முதலமிச்சரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அப்போது  முதலமைச்சரின் தோழி சசிகலாவையும் அவரது கணவர் நடராஜனையும் ராகுலுக்கு திருநாவுக்கரசர் அறிமுகம் செய்து வைத்தார்.

அவர்களுக்கு ராகுல் காந்தி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

வீர் சாவர்க்கர் பெயரில் சர்வதேச விருது.. ஏற்க மறுத்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்!
பிரதமர் மோடி இதயங்களை ஹேக் செய்பவர்! மக்களவையில் தாறுமாறாக புகழ்ந்த கங்கனா ரணாவத்!