ஒன்று திரண்டு வந்து அஞ்சலி செலுத்திய கேரள எதிரெதிர் துருவங்கள்

First Published Dec 6, 2016, 4:09 PM IST
Highlights


முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் உடலுக்கு இந்தியாவின் அனைத்து தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அரசியலில் எதிரெதிர் கட்சியை சேர்ந்த எந்தவொரு அரசியல்வாதிகளும் எந்த நிகழ்ச்சிக்கும் ஒன்றாக போவது என்பது தமிழகத்தில் என்றுமே நடந்ததில்லை. ஆனால் கேரளாவில் அரசியல் நாகரீகம் என்பது மிகுந்த மரியாதையுடன் செயல்பட்டு வருகிறது. அதற்கு உதாரணம்தான் கேராளவில் இருந்து ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்த வந்த அரசியவாதிகள்.

தற்போது கேரளாவில் முதல்வராக உள்ள மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியை சேர்ந்த பினராயி விஜயனும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டியும் ஒன்றாக முதலமைச்சரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

கேரள ஆளுநர் சதாசிவம்,காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதாலாவும் ஒன்றாக வந்தனர்.

எதிரெதிர் கட்சிகளாக இருந்தாலும் இதுபோன்ற அரசியல் நாகரீகம் கேரளாவில் மட்டுமே உள்ளது.

click me!