"பெண்களுக்கு 11 ஆயிரம் கோடி ரூபாய் கடன்…" பட்ஜெட் உரையில் பா.ஜ.க.வை பாராட்டிய பிரணாப்

Asianet News Tamil  
Published : Jan 31, 2017, 01:26 PM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
"பெண்களுக்கு 11 ஆயிரம் கோடி ரூபாய் கடன்…" பட்ஜெட் உரையில் பா.ஜ.க.வை பாராட்டிய பிரணாப்

சுருக்கம்

ஏழை எளிய மக்‍களின் வாழ்க்‍கைத் தரத்தை உயர்த்த மத்திய அரசு நடவடிக்‍கை எடுத்து வருவதாகவும், 

நடப்பு நிதியாண்டில் ஒன்றரைக்‍கோடி வீடுகளுக்‍கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும்என்றும், 

பெண்களுக்‍கான ஒரு கோடி வங்கிக்‍ கடன்கள் 

தொடக்‍கப்பட்டு 11 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்றத்தில் 

குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிதெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இக்கூட்டத்தில் உரையாற்றுவதற்காக குடியரசு தலைவர் 

திரு. பிரணாப் முகர்ஜி, சாரட் வண்டியில் அழைத்து வரப்பட்டார். நாடாளுமன்றவாயிலில் அவரை குடியரசு 

துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வரவேற்றனர். 

இதனைதொடர்ந்து உரையாற்றிய பிரணாப் முகர்ஜி, பொதுபட்ஜெட்டும், ரயில்வே பட்ஜெட்டும் ஒன்றாக தாக்‍கல் செய்யப்படுவது சுதந்திர இந்தியா வரலாற்று சிறப்பு மிக்‍கது என பெருமிதம் தெரிவித்தார்.

மத்திய அரசின் செயல் திட்டங்களை விளக்‍கி உரை நிகழ்த்தினார். பணமதிப்பிழப்பு நடவடிக்‍கையால் ஊழல் மற்றும் கருப்புப் 

பணத்தை ஒழிக்‍க பெரிதும் உதவிகரமாக இருப்பதாக குடியரசுத் தலைவர்குறிப்பிட்டார்.

ஏழை எளிய மக்‍களின் வாழ்க்‍கை தரத்தை உயர்த்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்‍கைகளை எடுத்து 

வருவதாக தெரிவித்த பிரணாப், ஒரு கோடியே 20 லட்சம் மக்‍கள் சமையல் எரிவாயு மானியத்தைதாங்களே 

முன்வந்து விட்டுக்‍கொடுத்துள்ளதாகவும், நடப்பு நிதியாண்டில் ஒன்றரைக்‍கோடி வீடுகளுக்‍கு சமையல் 

எரிவாயு இணைப்பு வழங்கவுள்ளதாகவும், மகளிர் சுயஉதவிக்‍ குழுக்‍களுக்‍கு 16 ஆயிரம்கோடி ரூபாய் 

ஒதுக்‍கீடு செய்யப்படுள்ளதாகவும் தெரிவித்தார். 

மேலும், வீடற்ற அனைத்து மக்‍களுக்‍கும் வீட்டு வசதியை ஏற்படுத்தித்தர அரசு முனைப்புடன் உள்ளதாகவும், LED விளக்‍குகள் பயன்பாட்டால் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மின்சாரம்சேமிக்கப்பட்டுள்ளதாகவும், 

தரமான மருந்துகளை குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  

விவசாயிகளுக்‍கு போதிய கடன், பாசன வசதி, தரமான விதைகள் வழங்க மத்திய அரசு 

நடவடிக்‍கை மேற்கொண்டுள்ளதாகவும், 3 கோடி கிசான் கார்டுகள் ரூபே கார்டுகளாக மாற்றப்படும் 

என்றும் அவர்தெரிவித்தார்.

மேலும் 22 லட்சம் டன் பருப்பு கையிருப்பில் உள்ளதாக தெரிவித்த குடியரசு தலைவர், விலைவாசி 

உயர்வைக்‍ கட்டுப்படுத்தவும், நுகர்வோரை பாதுகாக்‍கவும் அரசு பல்வேறு நடவடிக்‍கை எடுத்து வருவதாகதெரிவித்தார். 

மகளிர் நலனைக் காக்க அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், 

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்‍கு உயர்‍கல்வி கிடைக்‍க நடவடிக்‍கை 

எடுக்கப்பட்டுள்ளதாகவும்குறிப்பிட்டார்.

11 ஆயிரம் கிராமங்களுக்கு மின் இணைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், 7-வது நிதிக்‍குழு அறிவிப்பால் 50 லட்சம் ஊழியர்களும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களும்பயனடைந்துள்ளதாகவும், 12 வார காலமாக இருந்த பேறு கால விடுப்பு, 26 வார காலமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

PREV
click me!

Recommended Stories

விர்ர்ர்ரென உயரும் தங்கத்தின் விலை..! உலகளவில் தாறுமாறாக உயர இதுதான் காரணம்..! எப்போது குறையும் தெரியுமா..?
காவி உடையில் சிங்கம்..! மோடி- யோகியை ஆதரிப்பதால் என் சமூகம் ஒதுக்குகிறது..! தௌகீர் அகமது வேதனை..!