
உத்தரபிரதேசம், கோவா, பஞ்சாப் உள்பட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
உத்தரப்பிரதேச மாநிலத்தில், வரும் 11ம் தேதி முதல் 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஆளுங்கட்சியான சமாஜ்வாடி கட்சி, காங்கிரசுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. எதிர் காட்சியாக மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மோதுகிறது. இதனால், அங்கு தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது.
இதைதொடர்ந்து மேற்கு உத்தர பிரதேசம் புலந்த்ஷல் பகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் சுஜட் அலம், எதிர்க்கட்சி வேட்பாளரான பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த ஹஜி அலீமுக்கு எதிராக பிரச்சார பொதுக்கூட்டத்தில், பேசி கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென அவர், “ நான், தெரியாமல் செய்த தவறை மன்னித்து விடுங்கள்” எனக் கூறி, அவர் அணிந்து இருந்த ஷூவை கழற்றி, தன்னை தானே அடித்து கொண்டார். பிரச்சார மேடையில் சமாஜ் வாடி கட்சி வேட்பாளர் தன்னை தானே ஷூவால் தாக்கி கொள்வதை பார்த்ததும் அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.