mulayam singh death: எமர்ஜென்சி காலத்தில் ஜனநாயகத்தின் போர் வீரர் முலாயம் சிங் யாதவ் : பிரதமர் மோடி புகழாஞ்சலி

Published : Oct 10, 2022, 11:06 AM ISTUpdated : Oct 10, 2022, 08:39 PM IST
mulayam singh death: எமர்ஜென்சி காலத்தில் ஜனநாயகத்தின் போர் வீரர் முலாயம் சிங் யாதவ் : பிரதமர் மோடி புகழாஞ்சலி

சுருக்கம்

எர்ஜென்சி காலத்தில் ஜனநாயகத்தின் போர் வீரராக இருந்தவர் முலாயம் சிங் யாதவ் என்று பிரதமர் மோடி புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.

எர்ஜென்சி காலத்தில் ஜனநாயகத்தின் போர் வீரராக இருந்தவர் முலாயம் சிங் யாதவ் என்று பிரதமர் மோடி புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.

உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதிக் கட்சித் தலைவருமான முலாயம் சிங் உடல்நிலை கடந்த சில மாதங்களாக மோசமடைந்ததையடுத்து, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளி்க்கப்பட்டு வந்தது. 

உத்தரப்பிரதேசத்தின் ‘நேதாஜி’! யார் இந்த முலாயம் சிங் யாதவ்

முலாயம் சிங் யாதவ் கடந்த வாரத்திலிருந்து குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் வயது மூப்பு, உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 88. 

இந்தத் தகவலை சமாஜ்வாதிக் கட்சித் தலைவரும் உ.பி. முன்னாள் முதல்வரும் அவரின் மகனான அகிலேஷ் யாதவ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தின் நேதாஜி என்று அழைக்கப்படும் முலாயம் சிங் யாதவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

குஜராத் தேர்தலில் மீண்டும் எதிரொலிக்கும் சாதி: பிரதமர் மோடியை அவமதித்த ஆம் ஆத்மி தலைவர்

பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்ட இரங்கல் செய்தியில் “ முலாயம் சிங் யாதவ் குறிப்பிடத்தக்க ஆளுமை கொண்டவர். பணிவான குணத்தை உடைய முலாயம் சிங் யாதவ் , மக்களின் பிரச்சினைகளை அறிந்த மக்கள் தலைவர். மக்களுக்கு தொடர்ந்து சேவைகளைச் செய்து வந்த முலாயம் சிங் யாதவ் , லோக்நாயக் ஜெயப்பிரகாஷ், ராம்மனோகர் லோகியாவின் சிந்தனைகளை மக்களிடம் பரப்பியவர்.

உத்தரப்பிரதேச அரசியலிலும், தேசிய அரசியலிலும் முலாயம்சிங் யாதவ் தனித்துவத்தோடு விளங்கினார். நாட்டில் எமர்ஜென்சி கொண்டுவரப்பட்ட காலத்தில் முக்கிய போர்வீரராக முலாயம் சிங் யாதவ் செயல்பட்டார்.

நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த முலாயம் சிங் யாதவ் தேசத்தை வலிமைப்படுத்தினார். அவரின் நாடாளுமன்ற உரைகள் மிகவும் நுட்பமானவை, அறிவுப்பூர்வமானவை, தேசிய நலனோடுதான் இருக்கும். 
நான் முதலமைச்சராக இருந்தபோது, முலாயம் சிங் யாதவுடன் பலமுறை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறேன்.

mulayam singh yadav died: சோகத்தில் மூழ்கிய உ.பி; சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் காலமானார்

அவருடனான நட்பு,நெருக்கம் தொடர்ந்து வந்தது, அவரின் கருத்துக்களை அறிய எப்போதும் ஆவலுடன் இருந்தேன். அவரின் மறைவு எனக்கு வேதனையை அளிக்கிறது. அவரின் குடும்பத்தாருக்கும், லட்சக்கணக்கான ஆதரவாளர்களுக்கும்  எனது அனுதாபங்கள். ஓம் சாந்தி! 

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!