உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதிக் கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவின்இன்று காலமானார். அவருக்கு வயது 82.
உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவ் இன்று காலமானார். அவருக்கு வயது 82.
இந்தத் தகவலை சமாஜ்வாதிக் கட்சித் தலைவரும் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும் அவரின் மகனுமான அகிலேஷ் யாதவ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.முலாயம் சிங் உடல்நிலை கடந்த சில மாதங்களாக மோசமடைந்ததையடுத்து, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளி்க்கப்பட்டு வந்தது.
குஜராத் தேர்தலில் மீண்டும் எதிரொலிக்கும் சாதி: பிரதமர் மோடியை அவமதித்த ஆம் ஆத்மி தலைவர்
முலாயம் சிங் யாதவ் கடந்த வாரத்திலிருந்து குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் வயது மூப்பு, உடல்நலக்குறைவால் காலமானார்.
முலாயம் சிங் யாதவின் நுரையீரல் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டதால் மூச்சுவிடுவதற்கு மிகவும் சிரமப்பட்டுவந்தார். அவருக்கு நுரையீரல் சிறப்பு மருத்துவர்கள் நிதின் சூத், சுஷில் கட்டாரியா இருவரும் சிகிச்சை அளித்து வந்தனர்.
ஆகஸ்ட் 22ம் தேதியிலிருந்து முலாயம் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். ஜூலை மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் விரைவில் குணமடைந்து முலாயம் வீடு திரும்பினார்.
இந்நிலையில் இந்த முறை முலாயம் சிங் உடல்நிலை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, குருகிராம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் இன்று முலாயம் சிங் காலமானார்.