இந்தியா எரிசக்தி வார மாநாடு பெங்களூருவில் நடந்துவரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு அர்ஜெண்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் டி ஷர்ட்டை பரிசாக வழங்கினார், அர்ஜெண்டினாவின் ஒய்.பி.எஃப் நிறுவன தலைவர் பப்ளோ கான்ஸெலஸ்.
கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், கர்நாடகாவில் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்துவருகிறார்.
அந்தவகையில், 3 நாட்கள் பயணமாக பெங்களூரு வந்த பிரதமர் மோடி இந்தியா எரிசக்தி வார மாநாட்டை தொடங்கிவைத்தார். இந்த விழாவில் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
உலகளவில் எரிசக்தி துறை முதலீட்டுக்கு சிறந்தநாடு இந்தியா! முதலீ்ட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
இந்திய எரிசக்தி வார மாநாட்டை தொடங்கிவைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 2023-24ம் ஆண்டு பட்ஜெட்டில் மூலதனச் செலவுக்காக ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீட்டின் மூலம், ஹைட்ரஜன், சோலார் பவர், சாலைப் போக்குவரத்து வசதிக்கு அதிகமான ஊக்கம் கிடைக்கும். எனவே இந்தியாவின் எரிசக்தி துறையில் உள்ள முதலீடு வாய்ப்புகளை முதலீட்டாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். உலகளவில் முதலீட்டுக்கு சிறந்த நாடாக இந்தியா திகழ்கிறது. 2070ம் ஆண்டுக்குள் இந்தியாவின் கார்பன் வெளியேற்றத்தை பூஜ்ஜியமாக குறைக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்காத எரிபொருளை பயன்படுத்தவும் பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது என்றார் பிரதமர் மோடி.
அதன்பின்னர், பிரதமர் மோடிக்கு அர்ஜெண்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் டிஷர்ட் பரிசாக வழங்கப்பட்டது. அர்ஜெண்டினாவை சேர்ந்த ஒய்.பி.எஃப் நிறுவனத்தின் தலைவர் பப்ளோ கான்ஸெலஸ் இந்த பரிசை வழங்கினார். அந்த புகைப்படம் வைரலாகிவருகிறது.
அதானி விவகாரத்தால் நாடாளுமன்றம் முடக்கம்:தீவிரமாகும் எதிர்க்கட்சிகள் போராட்டம்
சமகாலத்தின் தலைசிறந்த கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி, கடந்த ஆண்டு நடந்த ஃபிஃபா உலக கோப்பையை அர்ஜெண்டினாவுக்கு வென்று கொடுத்து தனது வாழ்நாள் கனவை நனவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.