மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு! எவ்வளவு கிடைக்கப்போகுது தெரியுமா?

By SG BalanFirst Published Feb 6, 2023, 5:28 PM IST
Highlights

மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி வெளியாக இருக்கிறது.

அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதுபற்றிய அறிவிப்பு வரும் மார்ச் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு மூன்று சதவீதம் சம்பள உயர்வு அளிக்கப்பட உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த டிசம்பர் மாதத்துக்கான அகில இந்திய நுகர்வோர் விலை குறியீடு எண் விவரங்களை தொழிலாளர் அமைச்சகம் அண்மையில் வெளியிட்டது. அதன் அடிப்படையில் ஊதிய உயர்வு 3 சதவீதமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அகில இந்திய நுகர்வோர் விலை குறியீடு எண் கடந்த ஆண்டு ஜூலை முதல் நவம்பர் வரை தொடர்ந்து அதிகரித்து வந்தது. டிசம்பரில் அது சரிவைச் சந்தித்துள்ளது. முன்னதாக அக்டோபர், நவம்பர் மாதங்களில் மாற்றம் இல்லாமலும் இருந்திருக்கிறது.

Budget Session: நாடாளுமன்றத்தை முடக்கும் காங்கிரஸ்... அமைச்சர் பிரகலாத் ஜோஷி கடும் கண்டனம்

இதுவே செப்டம்பரில் 131.3 ஆகவும், ஆகஸ்டில் 130.2 ஆகவும், ஜூலையில் 129.9 ஆகவும் இருந்தது. அக்டோபர், நவம்பரில் 132.5 புள்ளிகளாக இருந்தது, டிசம்பரில் 132.3 புள்ளிகளாகக் குறைந்துள்ளது.

இந்நிலையில் மத்திய அரசு மார்ச் மாதம் முதல் வாரத்தில் ஹோலி பண்டிகைக்கு முன்பாக, ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு பற்றிய அறிவிப்பை வெளியிட இருப்பதாகத் தெரிகிறது. இந்த ஊதிய உயர்வு ஜனவரி 2023 முதல் அமல்படுத்தப்படுவதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதன் மூலம் மத்திய அரசின் பல்வேறு துறைகளின் கீழ் பணிபுரியும் 48 லட்சம் ஊழியர்களும் 68 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் பெறுவார்கள்.

துருக்கி நாட்டிற்கு உதவி செய்யும் இந்திய அரசு!.. என்.டி.ஆர்.எப் மற்றும் மருத்துவ குழுக்களை அனுப்பும் இந்தியா !

click me!