
துருக்கியின் காசியண்டெப் மாகாணம் நுர்தாகி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில், உள்ளூர் நேரப்படி அதிகாலை 04:17 மணிக்கு சுமார் 17.9 கிலோமீட்டர் (11 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது.
நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த 15 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் 6.7 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நில அதிர்வால் துருக்கி மற்றும் சிரியாவின் எல்லைப்பகுதிகளில்ல் குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.
துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சிறப்பு பயிற்சி பெற்ற நாய் படைகளுடன் 100 பேர் கொண்ட NDRF குழுக்கள் விமானம் மூலம் அனுப்பப்படும் என பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகம் தெரிவித்துள்ளது. பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் உதவ NDRF மற்றும் மருத்துவக் குழுக்களை அனுப்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..மின் கட்டணம் கட்டவில்லையா? இன்று இரவு மின்சாரம் துண்டிக்கப்படும் - மக்களே உஷார்.! முழு விபரம் உள்ளே
திங்கள்கிழமை அதிகாலை துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை சமாளிக்க அனைத்து உதவிகளையும் வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின் வெளிச்சத்தில், பிரதமரின் முதன்மை செயலாளர் டாக்டர் பிகே மிஸ்ரா உடனடி நிவாரண நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
துருக்கி குடியரசின் அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் என்.டி.ஆர்.எப் (NDRF) மற்றும் மருத்துவக் குழுக்களின் தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள் மற்றும் நிவாரணப் பொருட்களுடன் உடனடியாக அனுப்பப்படும் என்று முடிவு செய்யப்பட்டது என்று பிரதமர் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பிரத்யேக பயிற்சி பெற்ற நாய் படைகள் மற்றும் தேவையான உபகரணங்களுடன் 100 பணியாளர்களை கொண்ட NDRF இன் இரண்டு குழுக்கள் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக பறக்க தயாராக உள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்களுடன் மருத்துவக் குழுக்கள் அத்தியாவசிய மருந்துகளுடன் தயார் நிலையில் உள்ளன. முன்னதாக, துருக்கியில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்சேதம் மற்றும் உடமைச் சேதங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.
துருக்கி அதிபரின் ட்வீட்டிற்கு பதிலளித்த பிரதமர், துருக்கியில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் உடமைச் சேதங்களால் வேதனை அடைந்துள்ளேன். உயிரிழந்த குடும்பத்தினருக்கு இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். இந்தியா ஒற்றுமையுடன் நிற்கிறது. துருக்கி மக்களுடன் இந்த சோகத்தை சமாளிக்க அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளது’ என்று பதிவிட்டார்.
இதையும் படிங்க..பேஷன் ஷோ நிகழ்ச்சியில் ‘திடீர்’ குண்டு வெடிப்பு.. நடிகை சன்னி லியோனுக்கு என்ன ஆச்சு.? வெளியான உண்மை தகவல்!
இதையும் படிங்க..ரிலீசுக்கு முன்பே ரூ.246 கோடியா!.. தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணின்னா சும்மாவா.! லியோ செய்த சாதனை!