Sonia Gandhi: ‘ஏழைகள் மீதான மோடி அரசின் சத்தமில்லா தாக்குதல்தான் பட்ஜெட்’: சோனியா காந்தி விளாசல்

By Pothy RajFirst Published Feb 6, 2023, 3:32 PM IST
Highlights

ஏழைகள் மீதான மோடி அரசின் சத்தமில்லா தாக்குதல்தான் மத்தியபட்ஜெட் 2023-24, காங்கிரஸ் ஆட்சியில் தொலைநோக்குப் பார்வையில் இயற்றப்பட்ட உரிமைக்காந சட்டங்களின் இதயத்தின் மீதான அடி என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி சாடியுள்ளார்.

ஏழைகள் மீதான மோடி அரசின் சத்தமில்லா தாக்குதல்தான் மத்தியபட்ஜெட் 2023-24, காங்கிரஸ் ஆட்சியில் தொலைநோக்குப் பார்வையில் இயற்றப்பட்ட உரிமைக்காந சட்டங்களின் இதயத்தின் மீதான அடி என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி சாடியுள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு 2வது முறையாக ஆட்சிக்கு வந்து தனது கடைசி மற்றும் முழுமையான பட்ஜெட்டை கடந்த 1ம் தேதி தாக்கல் செய்தது. அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் வரும் என்பதால், முழுமையான பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய  முடியாது. 

இந்த பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துவரும் நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆங்கில நாளேடு ஒன்றில் தனது கருத்தைத் தெரிவித்து கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கர்நாடகாவில் HAL ஹெலிகாப்டர் தொழிற்சாலை, சென்னைக்கு சிறப்பு திட்டம்:பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்

நிதிமுறைகேடு

பிரதமர் மோடிக்கு விருப்பமான மற்றும் நெருங்கிய தொழிலதிபர் மீது நிதிமுறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்தநிலையில் மோடியும், அவரின் அமைச்சரவைஅமைச்சர்களும் விஸ்வ குரு, அம்ரித் கால் என்று சத்தம்போட்டு உச்சரிக்கிறார்கள்.  

பிரதமர் மோடியின் கொள்கைகள் அவரின் சில கோடீஸ்வர நண்பர்களுக்கு பலன் கொடுக்கும். பணவீக்கம், மோசமாக வடிவமைக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி ஏழைகள், நடுத்தரக் குடும்பத்தினரின் செலவுகளை உயர்த்தி, சிறுதொழில்களை நசுக்கிவிட்டது. வேளாண்மையை மறந்து 3 வேளாண் சட்டங்களைக் கொண்டுவர முயன்று தோல்வி அடைந்தது.

தனியார்மயம்

விலைமதிப்பில்லா அரசு நிறுவனங்களை, சொத்துக்களை குறிப்பிட்ட தனியாரின் கரங்களில் மலிவாக மோடி அரசு ஒப்படைத்து அழிவுக்கான தனியார்மயத்தை கையில் எடுக்கிறது. இதனால் வேலையின்மை பெருகுகிறது, குறிப்பாக பட்டியலின மற்றும் பழங்குடி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

அமித் ஷா ட்ரீட்மெண்டும் அமர்த்தியா சென்னுக்குக் கிடைத்த ஆதரவும்

மோடியின் நண்பர்கள் மோசமான நிர்வாகம் செய்யும் நிறுவனங்களில், மக்கள் கடினமாக உழைத்து சேமித்த பணம் வைக்கப்பட்டிருக்கும் பொதுத்துறை வங்கி எஸ்பிஐ மற்றும் எல்ஐசி நிறுவனம் முதலீடு செய்யகின்றன. இதனால் மக்கள் பணத்துக்கு அச்சுறுத்தல்ஏற்படுகிறது.

ஒரேசிந்தனையுள்ள இந்தியர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து மத்திய அரசின் தீங்கான செயல்களை எதிர்க்க வேண்டும், மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். காங்கிரஸ் சார்பில் சமீபத்தில் நடத்தி முடிக்கப்பட்ட பாரத் ஜோடோ யாத்ராவில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை லட்சக்கணக்கான இந்தியர்கள் நடந்தார்கள். ஆழ்ந்த பொருளாதார அழுத்தம், விரிவடைந்த அதிருப்தி, ஆகியவை மக்கள் மனதில் இருப்பது தெரிகிறது.

3 காரணிகள்

விலைவாசி உயர்வு, வேலையின்மை, வருமானக் குறைவு ஆகிய 3 காரணிகளால் ஏழைகள் நடுத்தரக் குடும்பத்தினர், கிராமப்புற, நகர்ப்புற மக்கள் தண்டிக்கப்படுகிறார்கள். 

முக்கியமான சவால்களை மட்டும் அடையாளம் காண்பதில் மட்டும் 2023-24 பட்ஜெட் தோல்வி அடையவில்லை, ஏழைகள் மற்றும் விளம்புநிலையில் உள்ளவர்களின் நிலையை மோசமாக்கியுள்ளது. 
ஏழைகள் மீதான சத்தமில்லாத் தாக்குதல்தான் மோடிஅரசின் பட்ஜெட். 2004 முதல் 2014ம் ஆண்டுவரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் தொலைநோக்குடன் இயற்றிய சட்டங்களின் இதயத்தின் மீது தாக்குவதாக பட்ஜெட் இருக்கிறது

உச்ச நீதிமன்றத்தில் புதிதாக 5 நீதிபதிகள் பதவி ஏற்பு முழுவிவரம் என்ன?: எண்ணிக்கை 32 ஆக உயர்ந்தது

சுதந்திரத்தின் வாக்குறுதி ஒவ்வொரு இந்தியனுக்கும் ஒரு நல்ல வாழ்க்கையாக இருந்தது, அது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், சமூக, பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியாக தங்களை மேம்படுத்துவதற்கான சம வாய்ப்புகளைப் வழங்க வேண்டும்.

நிதி குறைப்பு

காங்கிரஸ் அரசின் உரிமைகள் அடிப்படையிலான சட்டம் இந்த இலக்கை நோக்கி ஒருங்கிணைக்கப்பட்டது. மக்களுக்கு அடிப்படை கல்வி, வேலைவாய்ப்பு, சத்துணவு வழங்குவதை உறுதி செய்யும். 
கிராமங்களில் மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது. நிதியுதவி இல்லாமல் பள்ளிக்கூடங்கள் திணறுகின்றன. சர்வ சிக்ஸான் அபியானுக்குநிதியில்லாமல் 3 ஆண்டுகளாக தேங்கி இருக்கிறது

குழந்தைகளுக்கு சத்தான உணவு போதுமான அளவுகிடைக்கவில்லை. மதியஉணவுத் திட்டத்துக்கான நிதியும் 10 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைக்கப்பட்டுள்ளது. நிதியின்மை, பணவீக்கம் நேரடியாக நாட்டின் ஏழை மக்களை பாதிக்கிறது. 

எதிர்பார்த்த்தைப் போலவே, இந்த சமூகநலத் திட்டங்கள் மீது ஏன் தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்து பிரதமர் மோடி ஏதும் கூறாமல் மவுனமாக இருக்கிறார். மூலதனச் செலவுகளுக்கு நிதிவழங்குவதே பகுத்தறிவு என்பது புரிகிறது.

அதானி விவகாரத்தில் பிரதமர் பதில் சொல்லி ஆகணும்! கார்கே திட்டவட்டம்

சந்தேகம்

மத்திய அரசினஅ புள்ளிவிவரங்களின் நம்பகத்தன்மை குறித்து வல்லுநர்கள் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர், நிதியை நன்கு செலவிட முடியுமா, மேலும் நிதியின் பெரும்பகுதி அரசாங்கத்தின் நண்பர்கள் மற்றும் ஆட்சியாளர்களின் கூட்டாளிகளுக்கு மட்டுமே செல்லும் என்று எச்சரிக்கை செய்துள்ளனர்.

ஆரோக்கியமான, அறிவார்ந்த மக்கள்தான் வளர்ச்சிக்கான அடித்தளம் என வரலாறு நமக்கு கற்றுக்கொடுத்துள்ளது. சமூக நலத்திட்டங்கள், கல்வி, சத்துணவு, சுகாதாரம் ஆகியவற்றுக்கானநிதி குறைக்கப்பட்டுள்ளது, தேசத்தின் நாளைய வளர்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது

இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்துள்ளார்


 

click me!