பாஜக வேட்பாளர் ராஜ்மாதா அம்ரிதா ராயை தொலைபேசியில் அழைத்து பேசிய பிரதமர் மோடி... என்ன பேசினார் தெரியுமா?

By Ramya sFirst Published Mar 27, 2024, 12:06 PM IST
Highlights

பாஜக வேட்பாளர் ராஜ்மாதா அம்ரிதா ராயை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

2024 மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு முடிந்துள்ள நிலையில் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. அந்த வகையில்  மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணா நகரில் மஹுவா மொய்த்ராவை எதிர்த்துப் பாஜக வேட்பாளர் ராஜ்மாதா அமிர்தா ராய் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர ராஜ்மாதா அமிர்தா ராயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, மேற்கு வங்கத்தில் அமலாக்கத்துறையால் கைப்பற்றப்பட்ட பணம், ஏழை மக்களுக்குச் சென்று சேர்வதை உறுதி செய்ய தாம் உழைத்து வருவதாக பிரதமர் தெரிவித்தார்..

சக்தி ஸ்வரூபா... சந்தேஷ்காலியில் பாதிக்கப்பட்ட பாஜக வேட்பாளருடன் உரையாடிய பிரதமர் மோடி!

மேலும் ஊழல்வாதிகளிடம் இருந்து அமலாக்கத்துறை கைப்பற்றிய பணமும், சொத்துக்களும் ஏழைகளிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்டது எனவும், அவை மீண்டும் ஏழைகளுக்கே திரும்பச் செல்வதை உறுதி செய்வதற்கான சட்ட வழிகளை ஆராய்ந்து வருவதாக பிரதமர் கூறினார்.

நாட்டில் ஊழலை ஒழிக்க பாஜக ஒருபுறம் உறுதிபூண்டுள்ளது என்றும், மறுபுறம் ஊழல்வாதிகள் அனைவரும் ஒருவரையொருவர் காப்பாற்ற ஒன்றிணைந்துள்ளனர் என்றும் பிரதமர் கூறினார். மேற்கு வங்க மக்கள், மோடி குடும்பத்திற்கு வாக்களிப்பார்கள் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்..

மேற்குவங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களின் ஊழல் குறித்து பாஜக தொடர்ந்து விமர்சித்து வருகிறது. அம்மாநில அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி உட்பட சிலர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடம் இருந்து பெரிய அளவிலான பணம் மற்றும் பிற சொத்துக்களை அமலாக்கத்துறையினர். இந்த நிலையில் தான் மக்களிடம் இருந்து கொள்ளையடிக்க பணத்தை மக்களிடமே திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றூ பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

வாஷிங் மெஷினில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2.5 கோடி பணம்.. அமலாக்கத்துறை பறிமுதல்..

2019 ஆம் ஆண்டில் மாநிலத்தில் உள்ள 42 மக்களவைத் தொகுதிகளில் 18 இடங்களை பாஜக வென்றது. திரிணாமூல் காங்கிரஸ் வலுவாக இருந்த மேற்குவங்கத்தில் பாஜக இத்தனை இடங்களில் வெற்றி பெற்றது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் 2024 மக்களவை தேர்தலில் அதை விட அதிகமான இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற உறுதியுடன் பாஜக பணியாற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..

click me!