புல் மப்பில் வந்த ஆசிரியர்! ஓட,ஓட செருப்பால் விரட்டி அடித்த பள்ளி மாணவர்கள்! தலைத்தெறிக்க பைக்கில் தப்பித்தார்

By vinoth kumar  |  First Published Mar 27, 2024, 11:48 AM IST

போதை தலைக்கு ஏறியதால் பாடம் நடத்தாமல் தரையில் படுத்து தூங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். பள்ளி குழந்தைகள் பாடம் சம்பந்தமாக ஏதாவது சந்தேகம் கேட்டால், அவர்களை அந்த ஆசிரியர் திட்டி வந்துள்ளார். 


குடிபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியரை பள்ளி குழந்தைகள் செருப்பை கொண்டு வீசி விரட்டியடித்த சம்பவம் தொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் மாவட்டத்தில் உள்ள பாலிபட்டா தொடக்கப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் தினமும் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் போதை தலைக்கு ஏறியதால் பாடம் நடத்தாமல் தரையில் படுத்து தூங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். பள்ளி குழந்தைகள் பாடம் சம்பந்தமாக ஏதாவது சந்தேகம் கேட்டால், அவர்களை அந்த ஆசிரியர் திட்டி வந்துள்ளார். 

Tap to resize

Latest Videos

இந்நிலையில், அண்மையில் அந்த ஆசிரியர் வழக்கம்போல் பள்ளி குழந்தைகளை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பள்ளி குழந்தைகள் செருப்புகளை எடுத்து ஆசிரியர் மீது வீச தொடங்கினர். அடுத்தடுத்து செருப்புகள் பறந்து வந்ததால் அந்த ஆசிரியர் தனது  இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பிக்க முயற்சித்தார். 

ஆனால், பள்ளி குழந்தைகளும் அவரைப் பின்தொடர்ந்து செருப்புகளை வீசி விரட்டியடித்தனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

click me!