குஜராத், மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பழங்குடியினரால் போற்றப்படும் பன்ஸ்வாராவில் உள்ள மான்கார் தாமுவில் பிரிட்டிஷ் ராணுவத்தால் கொல்லப்பட்ட்ட பழங்குடியினருக்கு அஞ்சலி செலுத்தினர் பிரதமர் மோடி.
ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். அதில், ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள மன்கர் தாம் தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடிதம் எழுதினார்.
பழங்குடியினர் படுகொலை:
ஜாலியன்வாலாபாக்கிற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பழங்குடியினரின் படுகொலைக்காக மங்கர் தாம் இன்றளவும் நினைவுகூறப்படுகிறது. இது சில சமயங்களில் ‘ஆதிவாசி ஜாலியன்வாலா’ என்றும் அழைக்கப்படுகிறது. நவம்பர் 17, 1913 அன்று ராஜஸ்தான் மற்றும் குஜராத்தின் எல்லையில் உள்ள மன்கர் மலைகளில் நூற்றுக்கணக்கான பில் பழங்குடியினரை பிரிட்டிஷ் படைகள் கொன்றன.
நெருங்கும் தேர்தல்:
இந்த படுகொலையில் 1,500 பழங்குடியினர் கொல்லப்பட்டனர். ராஜஸ்தான், குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பழங்குடியினர் இந்த இடத்தை புனிதமான இடமாகப் போற்றுகின்றனர். மேலும் இது பழங்குடியினரின் அடையாளத்தின் முக்கிய அங்கமாகவும் திகழ்கிறது. குஜராத்தில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அடுத்த ஆண்டு மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தேர்தல் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க..நவம்பர் 1 - மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாள் இன்று.!!
ராஜஸ்தான் முதல்வர் கோரிக்கை:
இப்பகுதியில் உள்ள ஆதிவாசி மக்களிடமிருந்து ஓட்டுக்களை பெற அனைத்து கட்சிகளும் முயற்சித்து வருகிறார்கள். சமூக சீர்திருத்தவாதியும், ஆன்மீகத் தலைவருமான கோவிந்த் குரு 1913 இல் மன்கர் படுகொலைக்குப் பிறகு பழங்குடியினருக்கான தனி மாநில கோரிக்கையை முதலில் எழுப்பினார். ஒரு நூற்றாண்டிற்குப் பிறகு, பழங்குடி அரசியலையும் சமூகத்தின் நலன்களையும் இணைக்க வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
பிரதமர் மோடி:
2012 ஆம் ஆண்டு பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது 63 வது வான் மஹோத்சவை மாங்கார் மலையிலிருந்து தொடங்கி வைத்தார். மேலும், ஸ்ரீ கோவிந்த் குருவின் பெயரிடப்பட்ட தாவரவியல் பூங்காவைத் திறந்து வைத்தார். அவர் 30 செப்டம்பர் 2012 அன்று கோவிந்த் குருவின் பிரதிமாவை ஆரம்பித்தார் மோடி முதல்வராக இருந்தபோது ஸ்ரீ கோவிந்த் குரு பற்றிய குஜராத்தி புத்தகமும் வெளியிடப்பட்டது. அந்த புத்தகத்திற்கு அவர் முன்னுரையும் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி அறிவிப்பு:
இந்நிலையில் ராஜஸ்தானில் உள்ள மங்கர்தாமை தேசிய நினைவுச்சின்னமாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளதாக அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1913 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் உள்ள மன்கரில் பிரிட்டிஷ் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட பழங்குடியினரைத் தவிர, பன்ஸ்வாராவில் பில் சுதந்திரப் போராட்ட வீரர் ஸ்ரீ கோவிந்த் குருவுக்கும் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.
இதையும் படிங்க..ட்விட்டரில் எலான் மஸ்கிற்கு உதவி செய்யும் சென்னை இளைஞர்.. யார் இந்த ஸ்ரீராம்.?
குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேல்:
இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேல் ஆகியோருடன் பிரதமர் மோடியும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேல், 1913ல் பஞ்சாபில் ஜாலியன் வாலாபாக்கில் நடந்த பழங்குடியினரை விட மாங்கரில் பழங்குடியினர் படுகொலை செய்யப்பட்டதை விட கொடூரமானது. நம் இந்தியாவில் ஜனநாயகத்தின் வேர்கள் வலுவாக உள்ளன’ என்று கூறினார்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்:
அடுத்து பேசிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ‘வெளிநாடு சென்றால் மோடிக்கு இவ்வளவு மரியாதை, மரியாதை ஏன் கிடைக்கிறது என்று பார்த்தால், மகாத்மா காந்தியின் நாட்டிற்கு மோடி பிரதமரானதால்தான் அவருக்கு மரியாதை கிடைக்கிறது. 70 ஆண்டுகளுக்குப் பிறகும் ஜனநாயகம் உயிருடன் இருக்கிறது’ என்று பேசினார்.
இதையும் படிங்க..அதிகரிக்கும் கொரோனா.. லாக்டவுனுக்கு பயந்து ஓடும் புலம்பெயர் தொழிலாளர்கள் - வைரல் வீடியோ!