நீங்கதானே என் குடும்பம்.. ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி நெகிழ்ச்சி உரை

By karthikeyan VFirst Published Oct 24, 2022, 3:18 PM IST
Highlights

இந்திய ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ வீரர்கள் தான் தனது குடும்பத்தினர் என்று நெகிழ்ச்சி உரையாற்றினார்.
 

தீபாவளி பண்டிகையை நாடு முழுவதும் மக்கள் புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து, இனிப்புகளை சுவைத்து, குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் கொண்டாடிவருகின்றனர். உணவு பண்டங்களுடன் அன்பையும் அனைவருடன் பகிர்ந்து கொண்டாடிவருகின்றனர்.

இன்று காலையே பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார். மக்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறிய பிரதமர் மோடி, நேராக கார்கிலுக்கு சென்று அங்கு இந்திய ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார்.

இதையும் படிங்க - Diwali : நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்..! பிரதமர் மோடி வாழ்த்து

ஒவ்வொரு ஆண்டும் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ள பிரதமர் மோடி, இந்த ஆண்டும் கார்கிலுக்கு சென்று ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தார். தீபாவளி போன்ற பண்டிகைகளின்போது கூட, குடும்பத்தினரை பிரிந்து நாட்டை காக்க எல்லையில் நிற்கும் ராணுவ வீரர்கள், பிரதமர் தங்களுடன் வந்து தீபாவளி கொண்டாடியதால் மகிழ்ச்சியடைந்தனர்.

இதையும் படிங்க - அயோத்தியில் பிரமாண்டமாக உருவாகும் ராமர் கோவில்.. 2023க்குள் ரெடி.! முழுவீச்சில் பணிகள் !

பின்னர் பேசிய பிரதமர் மோடி, ராணுவ வீரர்கள் தான் என் குடும்பத்தினர். உங்களுடன் (ராணுவ வீரர்கள்) தீபாவளியை கொண்டாடுவதே எனக்கு கிடைத்த பாக்கியம். இதைவிட சிறந்த தீபாவளியை என்னால் கொண்டாடமுடியாது. என் பலம், உற்சாகம் உங்களுடன் தான் இருக்கிறது. போரில் வெற்றி பெற்ற இந்த கார்கில் மண்ணிலிருந்து நாட்டு மக்களுக்கு எனது தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். ராணுவ வீரர்கள் எல்லையில் நின்று நாட்டை காப்பதால் தான் நாட்டில் ஒவ்வொரு குடிமகனும் நிம்மதியாக உறங்குகிறார்கள். ராணுவ வீரர்களின் தியாகங்கள் எப்போதுமே நாட்டை பெருமைப்படுத்துகின்றன என்று பிரதமர் மோடி பேசினார்.
 

click me!