ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் உரிமம் ரத்து... காங். தலைவர்களுக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு!!

Published : Oct 23, 2022, 09:33 PM IST
ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் உரிமம் ரத்து... காங். தலைவர்களுக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு!!

சுருக்கம்

சோனியா காந்தியின் குடும்பத்தார் நடத்தும் ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் உரிமத்தை ரத்து செய்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

சோனியா காந்தியின் குடும்பத்தார் நடத்தும் ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் உரிமத்தை ரத்து செய்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சோனியா காந்தி குடும்பத்தார் ராஜீவ் காந்தி நினைவு அறக்கட்டளை, இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை, ராஜீவ் காந்தி அறக்கட்டளை ஆகிய 3 அமைப்புகளை நடத்தி வந்தனர். ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் தலைவராக சோனியா காந்தியும், உறுப்பினர்களாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரியங்கா காந்தி, ராகுல்  காந்தி ஆகியோர் உள்ளனர். இதன் தலைமை அலுவலகம் டெல்லி ஜவஹர் பவனில் செயல்பட்டு வந்தது.

இதையும் படிங்க: இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியை அமைப்பது யார்? பாஜக Vs காங்கிரஸ் Vs ஆம் ஆத்மி - முந்துவது யார் ?

இந்த நிலையில் மேற்கண்ட 3 அமைப்புகளும் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற்றதாகவும் அதில் விதிமீறல்கள் நடந்துள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, விதிமுறை மீறல் ஏதும் நடந்துள்ளதா என்பதை அறிய மத்திய அமைச்சகங்களுக்கு இடையிலான குழுவை மத்திய அரசு கடந்த 2020ம் ஆண்டு அமைத்தது. அதன் அடிப்படையில் வௌிநாட்டில் இருந்து பெறப்பட்ட நிதி, நன்கொடை தொடர்பாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். அமலாக்கத்துறையின் சிறப்பு இயக்குநர் தலைமையில் மேற்கண்ட விசாரணைகள் நடத்தப்பட்டன.

இதையும் படிங்க: அயோத்தியில் பிரமாண்டமாக உருவாகும் ராமர் கோவில்.. 2023க்குள் ரெடி.! முழுவீச்சில் பணிகள் !

இந்த நிலையில், வெளிநாட்டில் இருந்து நிதி மற்றும் நன்கொடை பெறுவதில் விதிமுறைகளை மீறியதாக ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் (கடந்த 1991ம் ஆண்டு ஜூன் 21ல் தொடங்கப்பட்டது) உரிமத்தை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் ராஜீவ் காந்தி அறக்கட்டளை மற்றும் ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் பதிவு ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளதால் காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இன்றும் விமான ரத்துகள் இருக்கலாம்.. இண்டிகோவுக்கு டிஜிசிஏவின் அதிரடி நோட்டீஸ்! எப்போது சரியாகும்?
அதிர்ச்சி செய்தி! கோவா நைட் கிளப்பில் சிலிண்டர் வெடிப்பு – 23 பேர் பலியான சோகம்